உடலை பிட்னஸாக வைக்கும் உணவுகள்: கண்டிப்பாக சாப்பிடவும்

Report Print Printha in உணவு

நமது உடல் ஆரோக்கியத்திற்கும், உறுதித் தன்மைக்கும் விளையாட்டுகள், யோகா மற்றும் உடற்பயிற்சிகள் போன்றவற்றோடு ஊட்டச்சத்துமிக்க உணவுமுறைகளும் மிகவும் அத்தியாவசியம் ஆகும்.

அதற்கு நாம் கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் இவைகளே,

பருப்புகள்

துவரம் பருப்பு, உலர்ந்த பீன்ஸ், சோயா பீன்ஸ், மொச்சை, காராமணி, பால், பால் பொருட்கள், மீன் போன்ற பிற அசைவ உணவுகள் மற்றும் புழுங்கல் அரிசி போன்ற புரதச்சத்து மிகுந்த உணவுகளை அடிக்கடி சேர்த்து வர வேண்டும்.

தக்காளி ஜூஸ்

தக்காளி ஜூஸில் Lycopene எனும் சிவப்பு நிறமி மற்றும் விட்டமின் C அதிகம் உள்ளது. இவை சோர்வான தசைகளை புத்துணர்வாக்கி, காயங்கள் ஆற்றுவதற்கு உதவுகிறது.

கீரைகள்

பச்சைக் கீரைகள், புதினா மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றில் கால்சியம், பொட்டாசியம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், இரும்புச்சத்து மற்றும் பல விட்டமின்கள் உள்ளது.

இந்த உணவுகளை ஒரு வாரத்திற்கு குறைந்தது 2 முறையாவது உட்கொள்ள வேண்டும்.

கடல் உணவுகள்

கடல் உணவுகளான மீன்கள், கொட்டை வகைகள், ஆளி விதைகள், கடல் உணவுகள், மீன் எண்ணெய் மாத்திரைகள்ஆகியவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் செறிவாக உள்ளது. இவைகளை தினசரி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வாழைப்பழம்

வாழைப்பழம் எளிதில் செரிமானம் ஆகக் கூடியது. இதில் உடலுக்கு அதிக ஆற்றலைக் கொடுக்கும் விட்டமின் பி காம்ப்ளக்ஸ் சத்து செறிவாக உள்ளது.

எனவே இப்பழத்தை ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சிக்கு முன் அல்லது 15 நிமிடத்திற்கு ஒருமுறை சாப்பிடுவற்கு மிகவும் உகந்தது.

பீட்ரூட் ஜூஸ்

உடற்பயிற்சிகள் செய்வதற்கு 30-60 நிமிடங்களுக்கு முன், இயற்கை முறையில் விளைந்த பீட்ரூட் சாற்றை 300-500 மில்லி லிட்டர் அளவில் சாப்பிடுவதன் மூலம், உடற்பயிற்சிகள் செய்வதற்குத் தேவையான ஆற்றல் அதிகரிக்கும்.

உலர் பழங்கள்

பேரீச்சை, உலர் திராட்சைகள், இலந்தை, கொடி முந்திரி, அத்தி போன்ற உலர் பழங்களில் விட்டமின்கள், தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் உள்ளது.

இப்பழங்களை உடற்பயிற்சிகள் செய்வதற்கு முன் அல்லது மாலை நேரங்களில் சாப்பிட வேண்டும்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் பீட்டா கரோட்டின் சத்து அதிகம் உள்ளது. எனவே இந்த கிழங்கை உடற்பயிற்சிகள் செய்வதற்கு முன்னர் அல்லது மாலைநேர சிற்றுண்டியாக சாப்பிட வேண்டும்.

மாதுளை

மாதுளை பழங்களை அடிக்கடி சாப்பிடுவதால், அது நினைவுத்திறனை மேம்படுத்தி, உடல் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இதனால் உடல் ஆரோக்கியத்தை நல்ல முறையில் பராமரிக்கலாம்.

தயிர்

தயிரில் புரதம், கால்சியம், விட்டமின் பி காம்ப்ளக்ஸ் போன்ற சத்துக்கள் உள்ளது. வயிறு, குடல்பகுதிகள் மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கக்கூடிய பாக்டீரியாக்களை அதிகம் கொண்டுள்ளது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers