கர்ப்பிணிகள் இந்த 3 பழங்களை சாப்பிடவே கூடாது தெரியுமா?

Report Print Arbin Arbin in உணவு

கர்ப்ப காலம் என்பது பெண்களின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரும் ஒரு காலகட்டமாகும். குறிப்பாக அவர்களின் உணவுப் பழக்க வழக்கத்தில் இந்த காலம் ஒரு மிகப் பெரிய மாற்றத்தை உண்டாக்குகிறது.

பொதுவாக கர்ப்பகாலத்தில் பப்பாளி பழம் சாப்பிடக்கூடாது என்பது பலரும் அறிந்ததாகும். அந்த வகையில், கர்ப்பகாலத்தில் உட்கொள்ள கூடாத பழங்கள் குறித்து பார்க்கலாம்.

திராட்சை:

திராட்சை குழந்தையின் வளர்ச்சிக்கும், தாயின் உடல் ஆரோக்கியத்திற்கும் பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது.

ஆனால் கர்ப்ப காலத்தில் திராட்சை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

கர்ப்ப காலத்தில் ஹார்மோன் சமச்சீரின்மை உண்டாகும். திராட்சையின் தோல் பகுதியில் ரேசெர்வடோல் என்ற இயற்கையான கூறு இருக்கும்.

இது ஒரு விஷத்தன்மை வாய்ந்த ஒரு கூறாகும். ஹார்மோன் சமச்சீர் இல்லாத கர்ப்ப காலத்தில் இந்த ரேசெர்வடோல் உடலுக்குத் தீய விளைவுகளை உண்டாக்கும். ரேசெர்வடோல் உட்புகுதலால் பிரசவத்தில் பல்வேறு சிக்கல்கள் உண்டாகும் வாய்ப்புகளும் உண்டு.

திராட்சையின் தோல் பகுதி கடினமாக இருப்பதால், கர்ப்ப காலத்தில் சரியாக செரிமானம் ஆகாமல் மலச்சிக்கல் உண்டாகும் வாய்ப்பும் உண்டு.

மேலும் திராட்சையில் ஒவ்வாமை இருப்பவர்கள் , ஏற்கனவே செரிமான தொந்தரவு உள்ளவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள். உடல் பருமன் உள்ளவர்கள் திராட்சையை கர்ப்ப காலத்தில் தவிர்ப்பது நல்லது.

அன்னாசி பழம்:

அன்னாசி பழம் வைட்டமின், புரதம், மினரல், போன்றவை அதிகம் உள்ள ஒரு பழம். ஆனால் கர்ப்பகாலத்தில் ஆரம்ப கட்டத்தில் இந்த பழத்தை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

இந்த பழத்தை அதிகம் உட்கொள்வதால் கர்ப்பப்பை வாய் தளர்ந்து விடும் வாய்ப்புகள் உண்டு. அன்னாசி பழத்தில் இருக்கும் ப்ரோமிளின் என்னும் என்சைம் , கர்பப்பை வாயை பலவீனமாக்கி, கருசிதைவு அல்லது பிரசவ நேரத்திற்கு முன் கூட்டியே குழந்தை பிறப்பு போன்றவை ஏற்படுகிறது.

அன்னாசி பழத்தில் அதிக அளவு சர்க்கரை உண்டு. ஆகவே கர்ப்பகால நீரிழவு உள்ளவர்கள் இதனை உண்ணுதல் கூடாது. அன்னாசி பழம் உடல் சூட்டை அதிகரிக்கும். இதனால் கருசிதவு அல்லது முன் கூட்டியே குழந்தை பிறப்பு போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.

பப்பாளி:

பப்பாளி காய் அல்லது முழுவதும் பழுக்காத பப்பாளியை கர்ப்ப காலத்தில் உட்கொள்வது முற்றிலும் தவிர்க்கப் பட வேண்டியது.

பழுக்காமல் காயாக இருக்கும் பப்பாளி அல்லது முழுதும் கனியாத பப்பாளியில் லடெக்ஸ் என்னும் கூறு உள்ளது. கர்ப்ப காலத்தில் இவற்றை அதிகம் உட்கொள்வதால் இந்த லடெக்ஸ், கருப்பையில் சுருக்கத்தை உண்டாக்குகிறது.

பழுக்காத அல்லது பாதி பழுத்த பப்பாளியில் இருக்கும் பபைன் என்னும் புரத சிதைவு என்சைம் , உடலில் உள்ள அணுக்களை விலக செய்கிறது. இதனால் அணுக்களின் வளர்ச்சி பலவீனமடைகிறது . குழந்தையின் திசுக்கள் பலமிழந்து குழந்தைன் வளர்ச்சி தடைபடுகிறது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்