மலட்டுத் தன்மை.. மார்பக புற்றுநோய்! பிளாஸ்டிக் கப் இட்லி விபரீதங்கள்

Report Print Trinity in உணவு

தமிழர்களின் உணவில் பிரதான இடம்பிடித்தது இட்லி, 6 மாத குழந்தை முதல் 80 வயது பாட்டி வரை தைரியமாக இட்லியை சாப்பிடலாம்.

ஆவியில் வேகவைத்து எடுப்பதால் எளிதில் செரிமானம் ஆகிவிடும், உடல்நிலை சரியில்லாத நிலையில் கூட மருத்துவர் பரிந்துரைப்பது இட்லி உணவைத் தான்.

இவ்வாறு பல நன்மைகள் அடங்கிய இட்லியில் தான் புதுமையை புகுத்தியுள்ளனர், அதாவது முன்காலத்தில் துணியில் மாவு ஊற்றி இட்லி குக்கரில் வைத்து வேகவைத்து எடுப்பர்.

ஆனால் இப்போதோ.. பிளாஸ்டிக் கப்களில் இட்லியை வேக வைத்து எடுக்கின்றனர்.

தட்டு வடிவம், இதய வடிவம் போன்ற வடிவங்கள் இடம்பெறுகின்றன, திருமண விஷேசங்கள் தவிர இதனை பல உணவகங்களும் பயன்படுத்த தொடங்கி விட்டன.

பிளாஸ்டிக் என்கிற பெயரைக் கேட்டாலே நடுங்கும் வண்ணம் அதன் தீமைகள் உள்ளன

இதுகுறித்து நிபுணர்கள் கூறுகையில், இவ்வாறு இட்லியை வேகவைத்து எடுப்பதால், கொதிநிலையில் உணவுடன் பிளாஸ்டிக் கலக்கும் வாய்ப்புகள் அதிகம்.

இதனால் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயும், ஆண்களுக்கு மலட்டுத் தன்மையும் ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

எனவே பிளாஸ்டிக் கப் இட்லிகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்