இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடக் கூடாதாம்!

Report Print Printha in உணவு
326Shares
326Shares
ibctamil.com

அன்றாடம் நாம் சாப்பிடும் சில ஆரோக்கியமான உணவுகள் கூட தீமைகளை ஏற்படுத்துகிறது. அத்தகைய உணவுகளை அடிக்கடி சாப்பிடக் கூடாது. அந்த உணவுகள் இதோ,

சால்மன் மீன்

புகையில் சுடப்பட்ட சால்மன் மீன்களை சாப்பிடக் கூடாது. ஏனெனில் சால்மோன்கள் எரிக்கப்படும் போது, அவை பாலிசிலிக் நறுமண ஹைட்ரோகார்பன்களை உற்பத்தி செய்வதால், அது புற்றுநோயை உருவாக்கலாம்.

கொம்புச்சா

கொம்புச்சா மிகவும் அமிலத்தன்மை கொண்டது. இதை அதிகமாக சேர்த்துக் கொள்வதால், அது நெஞ்செரிச்சல் மற்றும் சொத்தை பற்களை ஏற்படுத்தும்.

டியூனா

டியூனாக்களில் உயர் பாதரச உட்பொருட்கள் உள்ளது. அதனால் தினமும் சாப்பிடக் கூடாது, ஏனெனில் அதில் உள்ள மெர்குரி விஷம். பார்வை பிரச்சனை மற்றும் தசை பலவீனத்தை ஏற்படுத்தும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் என்பது நிறைவுற்ற கொழுப்பு பொருள். இது ஒட்டுமொத்த கொழுப்பு மற்றும் டிரைகிளிசரைடு கொழுப்பு அமிலங்களின் அளவைக் குறைக்கலாம். எனவே தினமும் சாப்பிடக் கூடாது.

கேன் சூப்

கேன்களில் அடைக்கப்பட்ட சூப் சோடியம் குடுவையில் அடைக்கப்படுகிறது. அதனால் இதை அடிக்கடி சாப்பிடக் கூடாது. இல்லையெனில் பல உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும்.

இறைச்சி

மாடு, பன்றி, மீன் மற்றும் கோழி போன்ற இறைச்சிகளை அதிக வெப்பநிலையில் பொறித்து அல்லது வறுத்து சாப்பிடக் கூடாது. ஏனெனில் அது புற்றுநோயை உருவாக்கும்.

பழச்சாறுகள்

பழச்சாறுகள் சோடாவை போன்று மிகவும் மோசமானது. இதில் ஃப்ருக்டோஸ் எனப்படும் பழச் சர்க்கரை செறிவைக் கொண்டுள்ளது. எனவே இதை தினமும் சாப்பிடக் கூடாது.

தாவர வெண்ணெய்

காய்கறிகளில் இருந்து எடுக்கப்படும் தாவர வெண்ணெய்யில் அதிக டிரான்ஸ் கொழுப்பு உள்ளது. இது இரண்டாம் வகை நீரிழிவு மற்றும் பல உடல்நலப் பிரச்சனைகளை உருவாக்கும்.

காபி

வெளிநாடுகளில் கிடைக்கும் காபியானது உடலுக்கு நல்லது செய்யும் பொருள் அல்ல. ஏனெனில் இந்த காபியில் அதிக அளவு சர்க்கரை, உயர் ஃப்ருக்டோஸ் சர்க்கரை மற்றும் கார்ன் சிரப் கலந்த பாகு உள்ளது. அதனால் இது கல்லீரலின் ஆரோக்கியத்தை சேதப்படுத்தும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்