வாயுத் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இதை சாப்பிடுங்கள்!

Report Print Fathima Fathima in உணவு

வாயுத் தொல்லை, வயிறு சம்பந்தமான பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு பிரண்டை நல்லதொரு தீர்வை தருகிறது.

இந்தியா மற்றும் இலங்கையில் அதிகம் காணப்படும் பிரண்டையை துவையல் செய்து சாப்பிடுவார்கள்.

இதன் துவையல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்; ஞாபகசக்தியை பெருக்கும்; மூளை நரம்புகளை பலப்படுத்தும்; எலும்புகளுக்கு சக்தி தரும்.

ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும். வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும்; உடல் வனப்பும் பெறும்.

மனஅழுத்தம் மற்றும் வாய்வு சம்பந்தமான நோய்கள் இருந்தால், வயிறு செரிமான சக்தியை இழந்துவிடும்.

அப்படிப்பட்ட சூழலில் இதைத் துவையல் செய்து சாப்பிட்டால் செரிமான சக்தியைத் தூண்டிவிடும். அஜீரணக் கோளாறுகளைப் போக்கும். மூலநோயால் அவதிப்படுபவர்களுக்கு இந்தத் துவையல் பலன் தரும்.

பிரண்டை துவையல் செய்வது எப்படி?
 • பிரண்டை - ஒரு பிடி
 • வெங்காயம் - பாதி
 • காய்ந்த மிளகாய் - 2 அ 3
 • தனியா - 1/2 தேக்கரண்டி
 • பூண்டு - 3 அ 4 பல்
 • புளி - நெல்லிக்காய் அளவு
 • உப்பு - தேவையான அளவு
 • எண்ணெய் - வதக்க
 • கடுகு - 1/4 தேக்கரண்டி
 • உளுத்தம் பருப்பு - 1/4 தேக்கரண்டி
 • கறிவேப்பிலை - சிறிது
 • எண்ணெய் - தாளிக்க
செய்முறை
 • பிரண்டையை கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
 • கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், தனியா, பிரண்டை துண்டுகள், புளி சேர்த்து நன்கு வதக்கவும்.
 • பிரண்டை நன்கு வதங்க வேண்டும். இல்லையெனில்,சாப்பிடும் போது நாக்கு அரிக்கும்.
 • வதங்கியதும் ஆற வைத்து, சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
 • ஒரு கடாயில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த துவையலில் சேர்க்கவும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்