டோனியின் கட்டுமஸ்தான உடலமைப்பின் ரகசியம் இதுதான்

Report Print Deepthi Deepthi in உணவு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் டோனி தனது ஆட்டத்தால் ரசிகர்களை கவர்வது போன்று தனது கட்டுமஸ்தான உடல் அமைப்பின் மூலம் மற்றவர்களுக்கு முன்னோடியாக திகழ்கிறார்.

ஒரு விளையாட்டு வீரரின் வெற்றி அவரின் பயிற்சியை காட்டிலும் அவரின் உணவு முறையையே அதிகம் சார்ந்துள்ளது.

டோனி அருமையான உணவு பழக்கத்தை பின்பற்றுவதாலேயே பல வெற்றிகளை தன் வசப்படுத்த உறுதுணையாக இருக்கிறது.

காலை

தினமும் காலையில் பழ ஜூஸ் குடிப்பது இவரின் வழக்ம். மேலும் பாதாம்,பிஸ்தா போன்றவற்றையும் காலை வேளை பயிற்சியின்போது சாப்பிடுவாராம். முக்கியமாக தினமும் 1 கிளாஸ் பாலை காலையில் குடிக்கும் பழக்கம் கொண்டவர்.

மதியம்

மதிய வேளையில் இவருக்கு மிக பிடித்தமான உணவு "பட்டர் சிக்கன்". இது உடலின் ஊட்டத்தை அதிகரிக்கும். அத்துடன் விளையாட்டு வீரர்களுக்கு அதிகம் தேவைப்படும் புரதம் இதில் மிகுதியாக உள்ளது.

மேலும், சப்பாத்தியுடன் பருப்பு குழம்பு அல்லது வெஜ் சாலட்ஸ் சாப்பிடுவதும் இவரின் வழக்கமாம்.

யோகர்ட்டை மாலை வேளையில் எடுத்து கொள்வார். அத்துடன் சிக்கன் சாண்ட்விஜ் போன்றவற்றை தீனிபோன்று சாப்பிடுவார். எப்போதுமே இந்த வேளையில் சிறிய அளவே உணவை எடுத்து கொள்வாராம்.

இரவு உணவு

2 அல்லது 3 சப்பாத்திகளையே இரவில் சாப்பிடுவார். மேலும் வெஜ் சாலட்ஸ் மற்றும் பழங்களை இரவில் அதிகம் விரும்பி உண்பாராம்.

இவர் உணவு பழக்கத்தில் அதிகம் பால் மற்றும் யோகர்டை சேர்த்து கொள்ள காரணம் இதில் எண்ணற்ற கால்சியம் இருப்பதாலையே. கால்சியம் எலும்புகளுக்கு அதிக பலத்தை தந்து நல்ல எலும்பு பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கும். இதுவே அவரின் துடிப்பான விளையாட்டுக்கு காரணம்.

கால்பந்து மற்றும் பூப்பந்து விளையாடுவதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். ஏனெனில் இந்த விளையாட்டுகள் ஒருவரின் பார்வை கூர்மையையையும், புத்தி கூர்மையையும் அதிகரிக்கும். மேலும் உடல் தசைகளை வலு பெற உதவும். எனவே இந்த 2 விளையாட்டையும் தினப்பயிற்சியின் போது அவர் விளையாடுவார்.

விளையாட்டின் போதும் எந்தவித குளிர்பானங்களையும் குடிக்க விரும்பமாட்டார். ஏனெனில் அது உடலுக்கு பல உபாதைகளை ஏற்படுத்தும். அதிக புரதம் உள்ள இயற்கை பானங்களையே குடிப்பாராம். புரதசத்து விளையாட்டு வீர்ரகளுக்கு அடிப்படையாக தேவைப்படக்கூடிய முக்கியமான ஒன்று.

கொழுப்புகள் நிறைந்த உணவுகளை அதிகம் தவிர்த்து விடுவார். ஏனெனில் இது ஒருவரின் உடல் நலத்தை கெடுத்து விடும். - எந்தவித குளிர்பானங்களையும் குடிக்க மாட்டார். எப்போதும் பழ ஜுஸையும், புரத பானங்களையும் அருந்துவார்.

உணவுகளை காலம்கடந்து சாப்பிடுவதை விரும்பமாட்டாராம். அதிகாலை பயிற்சியை தினமும் பின்பற்றுவார்.

இவைகளே டோனியின் கட்டுமஸ்தான உடல் அமைப்புக்கு காரணம் ஆகும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers