எருமைப் பால் குடிப்பதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள்!

Report Print Kabilan in உணவு
68Shares
68Shares
ibctamil.com

உடலுக்கு நன்மை தருவதில் முதன்மையானது பசும்பாலா அல்லது எருமைப்பாலா என்று பலரும் குழம்பும் நிலையில், எருமைப்பால் குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கு காண்போம்.

எருமைப் பால்

பால் என்பது உடலுக்கு நன்மை தர கூடிய ஒன்றாகும். ஊட்டச்சத்துகள் அதிகம் தேவைப்படும் நபர்கள் தினமும் பால் குடிக்க வேண்டும். பசும்பாலை விட எருமைப் பாலில் அதிக ஊட்டச்சத்துகள் உள்ளன.

எருமைப் பாலில் அதிக புரதம், கால்சியம், பொட்டாசியம், கொழுப்புகள் போன்றவை பசும்பாலை விட 2 மடங்கு அதிகமாகவே உள்ளன.

அவற்றில் கலோரிகள் 237 அளவு, புரதம் 9.2 கிராம், கால்சியம் 412.4 மில்லி கிராம், கொழுப்பு 16.8 கிராம், கார்போஹைட்ரேட் 12.6 கிராம், நீர்ச்சத்து 203.5 கிராம், சோடியம் 0.1 கிராம், கொலெஸ்ட்ரால் 46.4 கிராம், வைட்டமின் B12 37 சதவிதம், வைட்டமின் C 15 சதவிதம், வைட்டமின் C 10 சதவிதம், பொட்டாசியம் 434.3 கிராம் ஆகியவை நிறைந்துள்ளன.

எதிர்ப்பு சக்தி

எருமைப் பாலில் உள்ள வைட்டமின் A, C ஆன்டி ஆக்சிடன்ஸ் மிகுதியாக உள்ளன. எனவே, எருமைப் பாலை குடிப்பதன் மூலம் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும். ஆனால், இதில் கொழுப்புகள் அதிகம் உள்ளதால், உடல் பருமன் உள்ளவர்கள் இந்த பாலை தவிர்ப்பது நல்லது.

இதய ஆரோக்கியம்

எருமைப் பாலில் உள்ள வைட்டமின் B12, இதய ஆரோக்கியத்திற்கு பயன்படுகிறது. பக்கவாதம், மாரடைப்பு போன்றவற்றை ஏற்படாமல் தடுக்க எருமைப் பால் உதவுகிறது. மேலும் இதயத்தின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ளவும், ரத்த அழுத்தம் சார்ந்த பிரச்சனைகள் வராமலும் தடுக்கவும் இந்தப்பால் உதவும்.

எலும்புகளுக்கு வலிமை

எருமைப் பாலில் அதிக அளவு கால்சியம் உள்ளதால், எலும்பு சார்ந்த பிரச்சனைகள் அனைத்தையும் இது சரி செய்யும். அத்துடன் இதில் உள்ள காப்பர், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் ஜின்க் உள்ளதால் எலும்புகள் வலுபெறும். கீழ் வாதம் உள்ளவர்களுக்கு இந்த எருமைப்பால் உகந்ததாக இருக்கும்.

முகப்பொலிவு

எருமைப் பாலில் ஆன்டி ஆக்சிடண்ட்ஸ் அதிகம் இருப்பதால், இது முகப்பொலிவிற்கு உகந்ததாகும். இதன்மூலம் முகப்பொலிவு பெறுவதுடன், சருமத்தை ஆரோக்கியமும் பெறும்.

உடல் எடை கூடுதல்

உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்கள், கொழுப்பு சத்துகள் நிறைந்துள்ள எருமைப் பாலை குடித்து வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.

குழந்தைகளுக்கு ஒவ்வாத எருமைப் பால்

குழந்தைகளுக்கு விரைவில் செரிமானம் ஆகக் கூடிய உணவுகளை கொடுக்க வேண்டும். ஆனால், எருமைப்பால் குழந்தைகளுக்கு உகந்ததாக இருக்காது. ஏனெனில் இதில் உள்ள அதிகளவு கொழுப்புகள் ஜீரணம் ஆகாது. எனவே, குழந்தைகளுக்கு எருமைப் பாலை விட பசும்பாலை கொடுப்பது தான் உகந்தது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்