தினமும் இந்த காபியை குடித்து வாருங்கள்: கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!

Report Print Kabilan in உணவு

ப்ராக்கோலி லாட்டி காபியை தினமும் பருகுவதன் மூலம் கிடைக்கும் ஏராளமான நன்மைகள் குறித்து இங்கு காண்போம்.

ப்ராக்கோலி இதுவரை உணவு, சூப் மற்றும் பானங்கள் ஆகியவற்றுக்காக தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதில் தயாரிக்கப்படும் காபி கூட உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் தருகிறது.

மேலும் காளான் காபி, முட்டை காபி, பட்டர் காபி ஆகியவற்றை விட மிகவும் சுவையானது இந்த ப்ராக்கோலி காபி.

ப்ராக்கோலி பொடியை வைத்து இந்த காபி தயாரிக்கப்படுகிறது. எனவே சைவ பிரியர்கள் இதனை விரும்பி பருகலாம்.

ப்ராக்கோலி காய்கறியை முற்றிலும் வெயிலில் காய வைத்து, பின் பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இதனை வழக்கமான காபி பொடிக்கு பதிலாக எடுத்துக் கொண்டு காபி தயாரிக்கலாம்.

கிடைக்கும் நன்மைகள்

  • ப்ராக்கோலி காபியில் ஒரு நாளைக்கு தேவையான காய்கறிகளின் சத்துக்கள் அடங்கியுள்ளன. இதற்கு 2 தேக்கரண்டி ப்ராக்கோலி பொடியே போதுமானது.
  • ப்ராக்கோலி காபியில் புரோட்டீன், நார்ச்சத்து, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பைட்டோ வேதிப்பொருட்கள், ஆற்றலைக் கொடுக்கும் பொருட்கள் போன்றவை அடங்கியுள்ளன.
  • இந்த காபியில் ஏராளமான தாதுக்கள் மற்றும் விட்டமின்கள் அடங்கியுள்ளதால், புற்றுநோய் வரும் அபாயத்தை தடுக்கும் சக்தி இதற்கு உண்டு.
  • அன்றாட உணவில் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள முடியாதவர்கள், இந்த ப்ராக்கோலி காபியை அருந்தலாம்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்