உடல் எடையைக் குறைக்க இரவு நேரத்தில் எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது தெரியுமா?

Report Print Jayapradha in உணவு

உடல் எடையைக் குறைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. உடல் எடையைக் குறைக்க பலரும் கடுமையான டயட்டை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்தகைய உடல் எடை பிரச்சனையைப் போக்க இரவு நேரங்களில் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிட கூடாத உணவுகளைப் பற்றி பார்ப்போம்.

சாப்பிட வேண்டிய உணவுகள்
செர்ரிப் பழங்கள்

செர்ரிப் பழத்தில் உள்ள மெலடோனின் இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும். எனவே இரவு உணவுக்கு பின் இப்பழத்தை சாப்பிடுவதால் வயிறு நிறைவதோடு அழ்ந்த தூக்கத்தை தரும்.

தயிர்

தயிரில் உள்ள அதிகப்படியான புரோட்டீன் வயிற்றை நிரப்புவதோடு தூங்கும் போது கொழுப்புக்களைக் கரைக்க உதவி உடல் எடையைக் குறைக்க உதவி புரியும்.

வேர்க்கடலை வெண்ணெய் டோஸ்ட்

வேர்க்கடலை வெண்ணெயில் தாவர வகை புரோட்டீன் தசைகளின் வளர்ச்சிக்கு உதவுவதோடு, இதில் உள்ள மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் வயிற்றை நீண்ட நேரம் நிரப்பி வைத்து, எடையைக் குறைக்க உதவும்.

வான்கோழி

வான்கோழியில் கொழுப்பில்லாத புரோட்டீன் உள்ளதால், தசைகளின் வளர்ச்சிக்கு உதவுவதோடு, உடல் எடையைக் குறைக்க உதவும்.

பாதாம்

பாதாமில் உள்ள நார்ச்சத்து பசியைக் கட்டுப்படுத்தும். அதோடு பாதாம் உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கான மிகச்சிறந்த உணவுப் பொருள் ஆகும்.

க்ரீன் டீ மற்றும் வேக வைத்த முட்டை

க்ரீன் டீயை இரவில் தூங்கும் முன் ஒரு கப் குடிப்பதன் மூலம், உடல் எடையை சீக்கிரம் குறைக்கலாம்.

முட்டையில் புரோட்டீன்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வேக வைத்த முட்டையை தினமும் சாப்பிடுங்கள்.

கிவி பழம்

கிவி பழத்தை இரவில் படுக்கும் முன் உட்கொள்வதன் மூலம், இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறுவதோடு, உடல் எடையைக் குறைக்கவும் இப்பழம் பெரிதும் உதவியாக இருக்கும்.

வாழைப்பழம்

இரவில் படுக்கும் முன் வாழைப்பழத்தை சாப்பிடுவதன் மூலம், அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, இரவில் நல்ல தூக்கத்தைப் பெற உதவுவதோடு, எடை குறையவும் உதவி புரியும்.

சாப்பிடக்கூடாத உணவுகள்
வெங்காயம்

வெங்காயத்தை இரவு நேரத்தில் பச்சையாக சாப்பிடக்கூடாது. ஏனெனில் பச்சையாக சாப்பிடும் எந்த ஒரு உணவுப் பொருளும் செரிமானமாவதற்கு தாமதமாவதால், அது வயிற்று உப்புசம் மற்றும் வாய்வு தொல்லையை சந்திக்க வைக்கும்.

சூடான மற்றும் காரமான உணவுகள்

சிலருக்கு இனிப்பு உணவுகளை விட காரமான உணவுகளின் மீது பிரியம் அதிகமாக இருக்கும். ஆனால் இப்படி காரமான உணவுப் பொருட்களை இரவு நேரத்தில் சாப்பிட்டால், அது நெஞ்செரிச்சல் தூண்டிவிட்டு தூக்கமின்மைக்கு வழிவகுத்துவிடும்.

பிட்சா

பிட்சா சேர்க்கப்படும் அளவுக்கு அதிகமான சீஸ் மற்றும் மைதா தான், இதனை ஆரோக்கியமற்றது ஆக்குகிறது. அதிலும் எடையைக் குறைக்க நினைப்போர் இதை இரவில் சாப்பிட்டால், எடை குறைவதற்கு பதிலாக அதிகரித்துவிடும்.

சாதம்

சாதத்தில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகளவில் உள்ளது. இதை இரவு நேரத்தில் சாப்பிட்டால், தூக்கத்தில் இடையூறை ஏற்படுத்துவதோடு, உடல் பருமனை மேலும் அதிகரிக்கும்.

முக்கியமாக சர்க்கரை நோய் இருப்பவர்கள், இரவில் சாதத்தை உட்கொள்வதனால், அவர்களது நிலைமை மேலும் மோசமாகும். எனவே சாதத்தை மட்டும் இரவு நேரத்தில் சாப்பிடவே கூடாது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்