இரவில் நிம்மதியாக தூங்க இந்த 5 உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க!

Report Print Jayapradha in உணவு

நாம் இரவில் சரியாக உறங்கவில்லை என்றால் அன்றைய நாள் முழுவதுமே நமக்கு வீண் தான்.

நமது உடம்பிற்கு போதுமான ஓய்வு, நாம் இரவில் சரியாக தூங்வதால் மட்டுமே கிடைக்கிறது. மேலும் முறையாக தூக்கம் இல்லாத போது பலவிதமான பக்கவிளைவுகளும் ஏற்படுகின்றன.

எனவே இரவு நேரத்தில் படுத்ததும் தூக்கம் வருவதற்கு உதவும் சில முக்கிய உணவுகளைப் பற்றி பார்ப்போம்.

பாதாம்

பாதாமில் உள்ள புரதங்கள் தூங்குகின்ற போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது. மேலும் பாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும் உறக்கத்திற்கும் உதவி செய்கிறது.

தேநீர்

தூங்கச் செல்வதற்கு சிறிது நேரத்தின் முன்னர் கிரீன் டீ அருந்தினால் அதில் உள்ள தியமின் என்னும் பொருள் நல்ல உறக்கம் ஏற்பட உதவி செய்கிறது.

வாழைப்பழம்

வாழைப்பழம் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அடங்கிய சிறந்த பழம். மேலும் அதில் உள்ள ட்ரப்போனின், செரடோனின் மூளையின் அமைதியான ஹார்மோன்களுக்கு உதவி செய்கிறது.

பால்

பால் மற்றும் பாலாடைக்கட்டி போன்ற பொருட்களிலும் அடங்கியுள்ள கால்சியம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவி செய்வதுடன் நரம்பிழைகளின் உறுதித் தன்மைக்கும் உதவி செய்கிறது.

ஓட்ஸ்

ஓட்ஸில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கன் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் உறங்கச் செய்வதற்கு ஒத்துழைக்கின்றன.

மேலும் அதிகமாக ஓட்ஸில் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக வாழைப்பழங்களை சேர்த்துக்கொள்ளலாம்.

செர்ரி பழம்

நன்கு தூக்கம வர உதவி பிரியும் மெலடோனின் என்கிற வேதியியல் பொருள் செர்ரி பழங்களில் அதிகம் உள்ளது. அதனால் இரவு தூங்க செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு இரண்டு செர்ரி பழங்களை சாப்பிட வேண்டும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers