மறந்தும் கூட மழைக் காலத்தில் இந்த உணவுகளை சாப்பிட்டு விடாதீர்கள்!

Report Print Kabilan in உணவு

மழைக்காலங்களில் பல தொற்றுநோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்பதால், சிலவகை உணவுகளை கட்டாயம் நாம் தவிர்த்தாக வேண்டும்.

அவ்வாறு மழைக்காலங்களில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து இங்கு காண்போம்.

வறுத்த உணவுகள்

சூடான எண்ணெயில் பொறித்த உணவுகளை மழைக்காலத்தில் சாப்பிடுவது உடலுக்கு உகந்தது அல்ல. ஏனெனில், இந்த உணவுகள் செரிமானத்தை பாதிப்பதுடன் வயிற்று புண், வீக்கம் போன்ற உபாதைகளை ஏற்படுத்தும். மேலும் இதுபோன்ற உணவுகளால் பாக்டீரியா தொற்று ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம்.

வெள்ளை சாதம்

வெள்ளை அரிசியை மழைக்காலத்தில் சாப்பிடுவதால் குடலில் வீக்கம், நீர்த்தேக்கம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அத்துடன் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமடைதல், செரிமான மண்டலத்தில் பிரச்சனை போன்றவையும் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, மழைக்காலத்தில் வெள்ளை அரிசியை விடுத்து, பழுப்பு அரிசியை சாப்பிடுவது உடலுக்கு நல்லது.

கடல் உணவுகள்

கடல் உணவுகளான மீன், இறால், நண்டு போன்ற உணவுகளை சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இது அவைகளின் இனப்பெருக்க காலம். மேலும் இந்த உணவுகளை சாப்பிடுவதால் வயிற்றில் தொற்று நோய்கள் உண்டாகலாம். பெரும்பாலும் இந்த காலங்களில் அசைவ உணவுகளை தவிர்ப்பதே நல்லது.

இறைச்சி

அசைவ உணவுகள் பொதுவாக செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். எனவே இவற்றை மழைக்காலங்களில் எடுத்துக்கொள்வது நல்லதல்ல. வேண்டுமெனில் அசைவ சூப் வகைகளை சாப்பிடலாம். இவை செரிமானம் அடைவதை துரிதப்படுத்தும்.

கீரைகள்

மழைக்காலங்களில் கீரைகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், கீரைகளில் உள்ள பூச்சிகள், இதர கிருமிகள் வயிற்றில் தாக்குதலை ஏற்படுத்தும். மேலும் முட்டைக்கோஸ், பிராக்கோலி, காலிஃபிளவர் போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது.

பழச்சாறு

தரமில்லாத பழச்சாறுகளை மழைக்காலங்களில் குடிப்பது மஞ்சள்காமாலை, வயிற்றுப்போக்கு போன்றவற்றை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனினும், வீட்டில் தயார் செய்யும் பழச்சாறுகளை அருந்தலாம்.

வெட்டி வைத்த பழங்கள்

நறுக்கப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதை மழைக்காலங்களில் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்தால், காற்றில் உள்ள ஈரப்பதம் மூலம் பாக்டீரியாக்கள் அவற்றில் பரவியிருக்கும். இது பல்வேறு நோய்தொற்றுக்களை உண்டாக்கும்.

எண்ணெய்

கடும், எள் போன்ற எண்ணெய் வகைகளை மழைக்காலங்களில் சமைப்பதை தவிர்க்க வேண்டும். அவை உடலில் தொற்றுநோயை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். எனவே மிதமான எண்ணெய்களான சோளம் அல்லது ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும்.

காளான்

காளான் மழைக்காலங்களில் தவிர்க்கப்பட வேண்டிய மிக முக்கியமான பொருள் ஆகும். ஏனெனில் மழைக்காலத்தில் பாக்டீரியாக்களின் தாக்குதல்களினால் காளான்கள் பாதிக்கப்படலாம்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்