இனி மறந்தும் இந்த மீன்களை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்: ஆபத்து வருமாம்!

Report Print Jayapradha in உணவு

மீன்களில் பலவகை உண்டு. அதில் சில வகை மீன்கள் நம் உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்றவாறு நாம் சாப்பிடும் உணவுகளை அளவுக்கு மீறி சாப்பிட்டால் அது நம் உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக அமைந்து விடும்.

அந்த வகையில் நாம் உணவில் சேர்க்கக் கூடாத சிலவகை மீன் வகைகளை பற்றி தெரிந்து கொண்டு அந்த வகை மீனகளை சாப்பிடமால் உடலை எப்படி பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.

கானாங்கெளுத்தி மீன்

கானாங்கெளுத்தி மீனில் உள்ள மெக்னீசியம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதாக இருந்தாலும் அதில் உள்ள அதிகளவு பாதரசம் நம் உடலுக்கு தீய தாக்கத்தை உண்டாக்கும்.

சால்மன் மீன்

சால்மன் மீன்களில் கரிம மாசு அதிகமாக உள்ளதால் அவற்றை அதிகமாக உண்டால் நீரிழிவு மற்றும் உடல்பருமன் பிரச்சனையை அதிகரிக்க செய்துவிடும்.

சுறா மீன்

சுறா மீனிலும் பாதரசம் அதிகம் உள்ளது. அதனால் இந்த சுறா மீனை அதிகம் சாப்பிட்டால் பல உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும்.

விலாங்கு மீன்

மஞ்சள் அல்லது வெள்ளி நிறத்தில் உள்ள விலாங்கு மீனில் உள்ள அதிகப்படியான பாலிகுளோரினேடட் பைபினைல் மற்றும் பாதரசம் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

வாளை மீன்

வாளை மீனில் உள்ள அதிகளவு பாதரசம் நம் உடலில் சேரும் போது அது மூளையின் செல்களை சேதமடைய செய்துவிடும்.

சூரை மீன்

நீல நிற துடுப்பு மற்றும் பெரிய கண்கள் உடைய இந்த சூரை மீனில் பாதரசத்தின் அளவு அதிகமாக உள்ளதால் அதை அதிகம் எடுத்துக் கொண்டால் அவை நம் உடலுக்கு கேடு விளைவிக்கும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்