செரிமான மண்டலத்திற்கு தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்கள்

Report Print Jayapradha in உணவு

ஒரு மனிதனின் வாய், உணவுக்குழல் இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் மற்றும் மலப்புழை ஆகியன செரிமான மண்டலங்கள் ஆகும்.

அத்தகைய செரிமான மண்டலம் சீராக இயங்காவிட்டால், உடலில் பல்வேறு நோய்கள் விரைவில் தாக்கும். மேலும் நாம் உண்ணும் ஆரோக்கியமற்ற உணவுகளால் செரிமான மண்டலம் சீரான இயக்கத்தில் நடைபெறுவது தடைபடுகிறது.

எனவே செரிமான மண்டலத்திற்கு எவ்வித பிரச்சனையும் கொடுக்காத உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.

வெள்ளை பிரட்

தற்போது அனைவரும் விரும்பி உண்ணும் சாண்ட்விசில் அதிகமான வெள்ளை பிரட் சேர்க்கப்படுகின்றன. மேலும் இதனால் அதில் உள்ள் அதிகப்படியான குளுட்டன் செரிமான மண்டலத்திற்கு தீங்கை விளைவிக்கும்.

பாஸ்தா

பாஸ்தாவில் குளுட்டன் அதிகமாக உள்ளதால் இவை உடலில் வாய்வுத் தொல்லை, வயிற்றுப் பிடிப்பு, நெச்செரிச்சல் மற்றும் உப்புசம் போன்றவற்றை அதிகம் உண்டாகும்.

மாட்டிறைச்சி

மாட்டிறைச்சியை உட்கொள்ளும் போது உடலில் கொழுப்புக்கள் மற்றும் சோடியத்தின் அளவு அதிகமாவதோடு அவை குடல் புற்றுநோயை உண்டாக்குகிறது. மேலும் மாட்டிறைச்சி எளிதில் செரிமானமாகாது எனவே இதை குறைந்த அளவு உண்பது மிகவும் நல்லது.

சாக்லேட்

சாக்லேட்டில் காப்ஃபைன் அதிகம் உள்ளதால் இவற்றை அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் போது அவை நெஞ்செரிச்சலை ஏற்படுத்தி வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்.

சோடா

சோடா அடிக்கடி குடித்து வந்தால் அவை செரிமான மண்டலத்தை பெரிதும் பாதிக்கும். அதுமட்டுமின்றி, நெஞ்செரிச்சல், வயிற்று உப்புசம் போன்றவற்றையும் ஏற்படுத்தும்.

வறுத்த உணவுகள்

வறுத்த உணவுகளை உட்கொண்டு வந்தால், மலத்தின் நிறம் மங்கி, செரிமான சரியாக நடைபெறாமல், அமிலம் அதிகம் உற்பத்தியாகி, நெஞ்செரிச்சல் ஏற்படும். எனவே பர்கர், பிரெஞ்சு ப்ரைஸ், வெண்ணெய் மற்றும் க்ரீம் போன்றவற்றை அதிகம் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

காபி

காபியில் உள்ள புரோட்டீன், மன அழுத்தத்தைத் ஏற்படுத்தும் ஹார்மான்களை தூண்டி, அதனால் நோயெதிர்ப்பு மற்றும் செரிமான மண்டலத்தை பாதிக்கும்.

மிளகாய்

மிளகாய் உணவின் சுவையை அதிகரித்தாலும் அதனை அதிக அளவில் உணவில் சேர்த்து வந்தால் அது உணவுக் குழாயில் எரிச்சலை ஏற்படுத்துவதோடு நெஞ்செரிச்சலையும் ஏற்படுத்தும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்