தினமும் காலை உணவில் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிடுங்கள்: நன்மைகள் அதிகம்

Report Print Jayapradha in உணவு

காலை உணவை கட்டாயம் சாப்பிடுவது அன்றைய பொழுதை புத்துணர்ச்சியுடன் தொடங்குவதற்கு வழிவகுக்கும். மேலும் காலை உணவை எக்காரணம் கொண்டும் தவிர்த்து விடவே கூடாது.

ஏனெனில் காலை உணவை சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை எளிதாக தூண்டப்பட்டு உடல் எடையை எளிதாக குறைக்க உதவும்.

மேலும் உங்களுக்கு தினமும் காலையில் எந்தெந்த உணவுகள் அதிக ஆற்றலையும், ஊட்டச்சத்துக்களையும் வழங்கும் என்று பார்க்கலாம்.

ஓட்ஸ்

காலையில் ஓட்ஸ் உணவுவகைகளை சாப்பிடுவது நல்லது. அது உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைப்பதற்கு உதவும். மேலும் இதனை தயிருடன் சேர்த்தோ அல்லது சிறிதளவு புரோட்டின் பவுடருடன் சேர்த்தோ சாப்பிடுங்கள்.

முட்டை

காலை உணவுடன் முட்டை சாப்பிட்டு வருவது நல்லது. ஏனெனில் இதில் சரியான அளவில் புரோட்டின்களும், ஒமேகா 3 அமிலங்களும், வைட்டமின் பி மற்றும் அமினோ அமிலம் உள்ளது. மேலும் இவை உடலில் கலோரியின் அளவை குறைப்பதற்கு துணைபுரியும்.

பாலாடைக்கட்டி

பாலாடைக்கட்டி பசியை நீண்ட நேரத்திற்கு கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும். பாலடைக்கட்டியுடன் சில தானியங்களை சேர்த்து சாப்பிடுவது மிகச்சிறந்த காலை உணவாகும்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை செல்களுக்கு கடத்த உதவுகிறது. மேலும் இதில் உள்ள ஸ்டார்ச்சு மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நீண்ட நேரம் பசி ஏற்படாமல் கட்டுப்படுத்தும். எனவே தினமும் காலையில் ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்கள்.

தர்ப்பூசணி

காலையில் வெறும் வயிற்றில் தர்ப்பூசணி சாப்பிடுவது நல்லது. அது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கண்கள் மற்றும் இதயத்திற்கும் நல்லது.

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலி சர்க்கரை அளவை குறைக்கவும், அசாதாரண வளர்ச்சிதை மாற்றத்தை சரிசெய்யவும் பயன்படுகிறது. இதை ஓட்ஸ் அல்லது தயிருடன் சேர்த்து சாப்பிடுங்கள்.

பாதாம்

பாதாம் பருப்பை தினமும் 6 வீதம் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது. அவை செரிமானத்தை எளிமைப்படுத்தும். அல்சர், வயிற்று கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும். முதல்நாள் இரவில் ஊற வைத்து மறுநாள் சாப்பிட வேண்டும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers