ரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

Report Print Jayapradha in உணவு

உணவில் இரும்புச்சத்து அதிகமாக இருந்தால் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும்.

மேலும் உடலில் ரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.

இரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்கும் உணவுகள்
  • தாமரைத் தண்டில் அதிக அளவு இரும்புச்சத்து விட்டமின் சி உள்ளதால் இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் நல்ல மாற்றத்தை உணர முடியும்.
  • சுண்டைக்காயில் உள்ள கசப்பு வயிற்றில் உள்ள பூச்சிகளை நீக்கும். ரத்தம் உடலில் ஊற உதவி செய்யும். எனவே இதனை வாரத்திற்கு இரண்டு முறை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.
  • தினமும் மூன்று பேரீச்சம்பழம், 10 காய்ந்த திராட்சைகளைச் சாப்பிட்டு வரலாம். மேலும் சிவப்பு, பிரவுன், கறுப்பு அரிசி என நாள்தோறும் ஒரு அரிசியை ஒரு கப் அளவுக்கு வேகவைத்துச் சாப்பிடலாம்.
  • அனைத்து வகைக் கீரைகள், முருங்கைக் கீரை, முள்ளங்கிக் கீரை, கோதுமைப் புல், வாழைப்பூ, சோயாபீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடலில் ரத்தம் உற்பத்தியாகும்.
  • அவல் உப்புமா, அவல் பொரி, அவல் கிச்சடி, அவல் பணியாரம், கட்லெட், ஸ்வீட்ஸ் என ஏதேனும் ஒரு வகையில் அவலை நொறுக்குத் தீனியாகச் சேர்த்துக்கொள்ளலாம்.
  • இரும்புச்சத்துள்ள உணவு உட்கொள்ளும்போது விட்டமின் சி உள்ள சிட்ரஸ் உணவு வகைகளைச் சாப்பிடுவதால் எளிதில் இரும்புச்சத்து உடலில் சேரும்.
  • முழு நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு, மாதுளை, சாத்துக்குடிப் பழங்களைச் சாப்பிடுவதால் விட்டமின் சி உடலில் சேர்ந்து, இரும்புச்சத்தை உடல் கிரகிக்க உதவும்.
  • முட்டை, ஈரல், மண்ணீரல், ஆடு மற்றும் கோழி இறைச்சியில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது. மேலும் வேகமாக இரும்புச்சத்தைக் உள்இழுக்கும் தன்மை சைவ உணவுகளைவிட அசைவ உணவுகளில்தான் அதிகம் உள்ளது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...