இலங்கையர் அதிகம் விரும்பி ருசிக்கும் கத்தரிக்காய் பொரிச்ச குழம்பு- செய்முறை விளக்கத்துடன்

Report Print Deepthi Deepthi in உணவு

இலங்கையர்கள் மத்தியில் கத்தரிக்காய் பொரிச்ச குழம்பு பிரபலமான உணவாகும். இதனை குறிப்பாக தமிழர்கள் பண்டிகை காலங்கள் அல்லது விரதம் இருக்கும் நாட்கள் வீட்டில் சமைப்பதினை வழக்கம்.

தேவையானவை
  • கத்தரிக்காய்
  • வெங்காயம்
  • பூண்டு
  • தேங்காய்ப்பால்
  • பெரிய சீரகம், கடுகு
  • புளி
  • கறிவேப்பிலை, மிளகாய்த்தூள்
  • உப்பு- தேவையான அளவு
செய்முறை

விரல் அளவில் வெட்டி வைத்திருக்கும் கத்தரிக்காயை எண்ணெய்யில் போட்டு சிவப்பாக பொரித்து வைத்துக்கொள்ளவும்.

தேங்காய்ப்பால் மற்றும் புளிக்கரைசலையும் தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, சீரகம், கடுகு, வெங்காயம் , பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் பொரித்த கத்தரிக்காய் துண்டுகளை போடவும், 2 நிமிடங்கள் கழித்து தேங்காய்ப்பால் மற்றும் மிளகாய்த்தூள் போட்டு மூடிவிடவும். குழம்பு ஓரளவுக்கு கொதித்தவுடன் சிறிதான அளவில் புளியை விடவும்.

குழம்பு கொதிக்கும்போது அதிகமாக கரண்டியை உள்ளே விட்டு கிளறக்கூடாது, ஏனெனில் கத்தரிக்காய் சிதைஞ்சு போனால் ருசி இருக்காது.

குழம்பு நன்றாக வற்றியவுடன் இறக்கவும், சுவையான பொரிச்ச கத்தரிக்காய் குழம்பு தயார். இதனை சோறு இடியாப்பம் புட்டு என அனைத்து உணவுகளுடனும் சேர்த்து சாப்பிடலாம்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்