இலங்கையர் சுவைக்கும் அரிசிமா கொக்கீஸ் செய்வது எப்படி?

Report Print Kavitha in உணவு

இலங்கையர் பண்டிகை காலங்களில் அதிகம் சுவைக்கும் உணவுகளில் கொக்கிசும் முக்கிய இடம் பெறுகின்றது.

இதனை தமிழில் அச்சு முறுக்கு என்று சொல்லுவார்கள்.

இதனை தமிழர் மட்டுமின்றி சிங்களவர்கள் தான் அதிகம் விரும்பி உண்ணுவார்.

தற்போது சுவையான இந்த கொக்கிசை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • அரிசி மா - 1 கிலோ
  • தேங்காய் பால் - தேவையான அளவு
  • முட்டை - 2
  • சீனி - 2 மேசைக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • மரக்கறி எண்ணெய் -1/2 போத்தல்

செய்முறை

முதலில் அரிசி மா,தேங்காய் பால், சீனி, முட்டை, உப்பு, மஞ்சள் இவை அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தோசைக்கு கரைப்பது போல கரைத்து வைத்து கொள்ளவும்

அதன் பின் எண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்றவும்.

எண்ணெய் நன்றாக கொதித்ததும் கொக்கீஸ் அச்சினை எடுத்து கொதித்த எண்ணையில் முக்கி பின் அந்த அச்சினை கரைத்து வைத்துள்ள மாவில் அடிப்பாகம் மட்டும்படும் படி முக்கி மீண்டும் கொதித்த எண்ணையில் போட்டு பொரித்தெடுக்கவும்.

சுவையான மொறு மொறு கொக்கிஸ் ரொடி. இதனை பண்டிகை நாட்களில் மட்டுமின்றி மாலை வேளைகளில் கூட செய்து சாப்பிடலாம்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்