இரவில் 7மணிக்கு மேல் சாப்பிட கூடாதாம்…! காரணம்?

Report Print Abisha in உணவு

இரவில் 7மணிக்கு மேல் தாமதமாக சாப்பிட்டால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

பொதுவாக தாமதமாக சாப்பிடுவது நல்லது இல்லை என்று பெரியவர்கள் கூறுவதை கேட்டிருப்போம் அதற்கு காரணம் என்ன என்ன பாதிப்பு என்று பார்க்கலாம்

1. இரவு 7 மணிக்கு மேல் உணவை சாப்பிட்டால் செரிமான கோளாறுகள் உண்டாகும். மிக விரைவிலே செரிமானம் அடைவதற்கு 7 மணிக்கு முன்னதாக உணவை சாப்பிடுதல் நல்லது.

2. இரவில் நாம் சாப்பிடும் உணவில் உப்பின் அளவு அதிகமாக இருந்தால் அவை நமது இதய ஆரோக்கியத்தை பாதித்து விடும். அத்துடன் வாயு தொல்லை, உயர் இரத்த அழுத்தம் போன்ற பலவித பாதிப்புகளை இது ஏற்படுத்தும்.

3. மார்பக புற்றுநோயின் பாதிப்பு, சர்க்கரை அளவு அதிகரித்தல், இரத்த கொதிப்பு போன்றவை பாதிப்பு உருவாகுதல். இதனை தடுக்க இரவு 7 மணிக்கு முன்னதாக உணவை உட்கொள்ளுங்கள்.

4. ஹார்மோன் இரவில் நேரம் கடந்து சாப்பிடுவதால் மூளையின் செயல்பாடு பாதிக்கப்படும். இதனால் மூளை விழித்திருக்கும் நிலை ஏற்படும். இதே நிலை நீடித்தால் ஹார்மோன் உற்பத்தியும் பாதிக்கப்படும்.

5. உடல் எடை இரவில் 7 மணிக்கு முன்னதாக சாப்பிட்டால் உடல் பருமன் அதிகரிக்காது. நேரம் கடந்து சாப்பிடுவதால் உடல் எடை அபரிமிதமாக கூட தொடங்கி விடும்

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்