பரோட்டா விரும்பிகளுக்கான எச்சரிக்கை!

Report Print Abisha in உணவு

அனைத்து உணவகத்திலும், பரோட்டாவை பார்க்க முடியும். சில உணவகங்களில் அசைவம் சேர்த்தது.சிலவற்றில் அசைவம் சேர்க்காதது. மைதாவில் உருவாகும் இந்த பரோட்டா பல நோய்களின் கதவுகளை திறக்கிறது என்கிறார்கள் டாக்டர்கள். பல நாடுகளில் தடைசெய்யப்பட்ட மைதா, இன்றும் சில நாடுகளில் அத்தியாவிசியமான ஒன்றாக உள்ளது.

சர்க்கரை நோய்: மைதா சேர்த்த உணவுகளுக்கு கிளைசெமிக் அளவீடு அதிகம். அதாவது, சாப்பிட்டவுடன், விரைவில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்யும். எனவே, சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய முக்கிய உணவு பரோட்டா.

இதய நோய் : எண்ணெயில் பொரித்த மைதா சார்ந்த உணவுகள், கெட்ட கொழுப்பை அதிகரிப்பது மட்டுமல்லாமல், இதய நோய்களையும் உண்டாக்கலாம்.

மலச்சிக்கல் : உடலுக்கு தேவையான நார்ச்சத்து இல்லாமல் இருப்பதாலும், மைதா சேர்த்த உணவுகளை ஆரோக்கியத்துக்கு எதிராக பார்க்கவேண்டியிருக்கிறது. இதற்கு,மலச்சிக்கலை உருவாக்குவதில் முக்கிய பங்குஉண்டு.இப்படி நோய் உருவாக்கும் உணவை தவிர்ப்பது ஆரோக்கியதிற்கு சிறப்பாகஇருக்கும்

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்