64 வயதிலும் நடிகர் கமல்ஹாசன் இப்படி இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா??

Report Print Deepthi Deepthi in உணவு

சினிமா உலகில் புகழின் உச்சத்தை தொட்ட நடிகர் கமல்ஹாசன் , தற்போது மக்கள் நீதி மையம் என்ற கட்சியை ஆரம்பித்து முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

64 வயதாகிவிட்ட நிலையிலும் , சினிமா ஒரு பக்கம், அரசியல் மறுபக்கம் என கலக்கி வருகிறார்.

என்னதான் தனது பணியில் ஆர்வமாக இருந்தாலும், தனது உடலையும் மிகவும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்.

தினமும் உடற்பயிற்சி மையத்துக்கு சென்று உடற்பயிற்சி செய்வார், அப்படி நேரம் கிடைக்காவிட்டால் வீட்டில் உடற்பயிற்சி செய்துகொள்வார்.

சாப்பாட்டு விடயத்தில் அசைவ விரும்பி ஆவார்.

மற்ற உணவுகளை விட கமல்ஹாசனுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். மீன் சமைப்பதற்காகவே தனி சமையல்காரரை சமையலுக்கு வைத்திருந்தாராம்.

அதுவும் கேரளத்தின் கறிமீன் ப்ரை என்றாலே கமலுக்கு தனி பிரியமாம். இவர் கேரளத்திற்கு சென்றால், அடிக்கடி இந்த கறிமீன் ப்ரையை தான் சாப்பிடுவாராம்.

துரித உணவுகளை தவிர்க்கும் கமல்ஹாசன் மாட்டிறைச்சியையும் விரும்பி சாப்பிடுவார். கொழுப்பு நிறைந்த உணவுகள், எண்ணெய் உணவுகளை அதிக அளவுக்கு எடுத்துக்கொள்வதில்லை.

கட்டுப்பாடுன் தான் இதுபோன்ற உணவுகளை சாப்பிடுவார். பால் குடிப்பதை விட பிளாக் காபி அதிகம் குடிப்பார்.

மேலும், இவருக்கு பிடித்த உணவு பிரியாணி ஆகும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்