மணமணக்கும் சுவையான நண்டு ரசம் செய்வது எப்படி?

Report Print Kavitha in உணவு

நண்டு என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் விரும்பி உண்ணும் உணவுகளில் ஒன்றாக இருக்கின்றது.

அதிலும் ந‌ண்டு குழ‌ம்பு, ந‌ண்டு குருமா என்றாலே எல்லோருக்கும் பிடித்தது. அதில் ஒன்று தான் நண்டு ரசம். தற்போது இதனை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
 • நண்டு - 250 கிராம்
 • கொத்தமல்லி - சிறிதளவு
 • சாம்பார் வெங்காயம் - 1
 • தக்காளி - 2
 • பச்சைமிளகாய் - 3
 • பூண்டு - 4 பல்
 • இஞ்சி - சிறிது
 • நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்
 • உப்பு - தேவைக்கு
 • கடுகு - தலா 1/2 டீஸ்பூன்
 • மிளகு - தலா 1/2 டீஸ்பூன்
 • சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்
 • சோம்பு - தலா 1/2 டீஸ்பூன்
 • கறிவேப்பிலை - தலா 1/2 டீஸ்பூன்
 • எண்ணெய் - சிறிது.
செய்முறை

நண்டை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் அரைக்க கொடுத்த பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு வதக்கி அரைத்து கொள்ளவும்.

மண்சட்டியில் அரைத்த விழுது, சிறிது தண்ணீர், நண்டு சேர்த்து, உப்பு போட்டு 10 நிமிடம் வேகவிடவும்.

நண்டு நன்றாக வெந்ததும் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களைபோட்டு தாளித்து நண்டு ரசத்தில் கொட்டி கலந்து இறக்கவும்.

கொத்தமல்லி தூவி சூடாக சூப் போல் பரிமாறலாம் அல்லது சாதத்துடனும் பரிமாறலாம்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்