சிக்கன் வெப்புடு தயாரிப்பது எப்படி

Report Print Abisha in உணவு

சிக்கன் என்றாலே அசைவ விரும்பிகளுக்கு கொள்ளை பிரியமாக இருக்கும். அத்தகைய சிக்கனில் இது புது ஸ்டையில்.

தேவையான பொருட்கள்
 • எலும்பில்லாத சிக்கன் - கால் கிலோ
 • தட்டிய பூண்டு - 30 கிராம்
 • வெங்காயம் - 50 கிராம்
 • கறிவேப்பிலை - சிறிதளவு
 • மஞ்சள்தூள் - 2 சிட்டிகை
 • காய்ந்த மிளகாய் - 3
 • மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
 • கொத்தமல்லித்தழை - சிறிதளவு
 • சீரகம் - அரை டீஸ்பூன்
 • எண்ணெய் - 2 டீஸ்பூன்
 • உப்பு - தேவையான அளவு

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிகொள்ளவும்.

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

பயன்படுத்தும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்ந்த மிளகாய், சீரகம், பூண்டு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் சிக்கன் துண்டுகள், மஞ்சள்தூள் சேர்த்து, தேவையான அளவு உப்பு, சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவிடவும்.

சிக்கன் வெந்து தண்ணீர் எல்லாம் வற்றியதும் மிளகுத்தூள் தூவிக் நன்றாக கிளறவும்.

கடைசியாக மேலே கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.

இது இந்தியாவில் ஆந்திரா மாநிலத்தில் செய்யப்படும் கோழி வெப்புடு ஆகும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers