ஓட்ஸ் என்னும் அரக்கன்: சில குறைகள்

Report Print Deepthi Deepthi in உணவு

நீரிழிவு நோயினை கட்டுப்படுத்த உடல் எடையினை குறைக்க பரிந்துரைக்கப்படும் உணவு ஓட்ஸ்.

தற்போது மக்களிடையே ஓட்ஸின் பயன்பாடானது கணிசமாக அதிகரித்துள்ளது. அரிசி, கோதுமை போன்று ரஷ்யா, அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் ஓட்ஸ் விளைவிக்கப்படுகிறது.

சத்துக்கள்

ஓட்ஸில் கால்சியம், விட்டமின் பி6, பி1, பி2, இரும்பு, புரதம், நார் கொழுப்பு போன்ற சத்துக்கள் உள்ளது, இவை கெட்ட கொழுப்பினை குறைத்து நல்ல கொழுப்பினை அதிகப்படுத்தும்.

பயன்கள்

ஒட்ஸ் சாப்பிடுவதால் டைப்2 நீரிழிவு நோயானது கட்டுப்படுத்தப்படுகிறது.

ஓட்ஸில் உள்ள பைட்டோ கெமிக்கலானது ஹார்மோன் தொடர்பான நோய்கள் வரும் வாய்ப்பினை குறைக்கிறது. மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் வருவதை தடுக்கிறது.

கெட்ட கொழுப்பானது கரைக்கப்படுவதால் இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பானது தடுக்கப்பட்டு மாரடைப்பு உள்ளிட்ட நோய்கள் உண்டாவது தடுக்கப்படுகிறது.

ஓட்ஸினை சாப்பிடுவதால் மலச்சிக்கல் உண்டாவது தடுக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கிறது.

எப்படி சாப்பிடலாம்?

பால் அல்லது நீரில் கலந்து சாப்பிடலாம். பாலில் ஓட்ஸினை கலந்து சாப்பிடுவதால் அதில் உள்ள கால்சியம், புரதம் போன்ற சத்துக்களானது கிடைக்கும்.

உடல் எடையினை குறைக்க நினைப்பவர்கள் ஓட்ஸில் மோர் கலந்து சாப்பிடலாம். ஆனால் தக்க உடற்பயிற்சியினை மேற்கொள்ளவேண்டியது கட்டாயம்.

ஓட்ஸ் உடன் மாவுச்சத்து அல்லாத பொருள்களை சேர்த்து சாப்பிடும் போது விட்டமின்கள், ஆண்டி ஆக்ஸிடெண்ட்கள் மற்றும் தாதுக்கள் அதிக அளவில் கிடைக்கும்.

ஓட்ஸில் உள்ள குறைகள்

ஓட்ஸில் ’ஓல்டு பேஷண்டு கோல்டு’ மற்றும் ’ஸ்டீல் கட்’ என இரண்டு வகை உள்ளது. இந்த இரண்டும் ஆரோக்கியமானது தான்.

ஓட்ஸ் நல்லது என்பதற்காக அதை அதிகமாகவோ அல்லது அதனுடன் கண்டதை சேர்த்தோ சாப்பிடக்கூடாது.

ஓட்ஸில் எந்த சுவையும் கிடையாது. தற்போது சுவைக்காக சாக்லேட் மற்றும் ஸ்ட்ராபேர்ரி போன்ற பல வகைகள் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதனால் ஓட்ஸில் உள்ள சத்துக்களானது முழுமையாக கிடைப்பது இல்லை.

கார்போஹைட்ரேட்டும் நார்ச்சத்தும் அதிகளவு உள்ளதால் இதனை எடுத்து கொள்ளும் அளவு மிக முக்கியம்.

ஓட்ஸில் அதிகளவு சர்க்கரையினை சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும்.

ஓட்ஸ் என்பது கொதிக்கவைத்து குடிக்கும் கஞ்சி தான், இது பசியினை கட்டுப்படுத்தும்.

அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் அதிகளவு விளைந்தும் இதனை அதிகம் உபயோகிக்காமல் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.

இவற்றிற்கு மேலாக கம்பு, கேழ்வரகு போன்ற நவதானியங்கள், ஓட்ஸினை விட 4 மடங்கு அதிகமான சத்துக்களை கொண்டுள்ளது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்