சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோதுமை அடை செய்வது எப்படி?

Report Print Kavitha in உணவு

இன்சுலின் எனும் ஹார்மோன் நம் உடலில் சீராகச் சுரக்காதது அல்லது குறைவாகச் சுரப்பது அல்லது சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யாதது நீரிழிவு நோய் வருவதற்கு அடிப்படைக் காரணமாகும்.

நீரிழிவு நோயை ஏற்படுத்தும் காரணிகளில் மிக முக்கியமானது, குடும்பப் பாரம்பரியம். பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால், வாரிசுகளுக்கு நீரிழிவு நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு என நமது முன்னோர்கள் அடிக்கடி கூறுவார்கள்.

அந்தவகையில் சக்கரை நோயாளிகள் சாப்பிடக்ககூடிய உணவு வகைகளில் ஒன்றான கோதுமை அடை உடலுக்கு சிறந்த பயனை தருகின்றது. தற்போது இந்த கோதுமை அடையை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • கோதுமை - ஒரு கப்
  • அரிசி - அரைகப்
  • துவரம்பருப்பு - கால் கப்
  • உளுந்தம்பருப்பு - சிறிதளவு
  • கடலைப்பருப்பு - கால் கப்
  • வெங்காயம் - 1
  • கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
  • பெருங்காயம், காய்ந்த மிளகாய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கோதுமையை தனியாகவும், அரிசி, பருப்பு வகைகளை ஒன்றாகவும் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

பின்னர் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து பெருங்காயம், உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.

அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்ட அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்றாக கலந்து அரை மணிநேரம் தனியாக வைக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும மாவை அடைகளாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு வேகவிட்டு எடுக்கவும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers