தொண்டை புண்ணை ஆற்றும் மருத்துவ குணம் நிறைந்த வெந்தயக்கீரை ரசம்... செய்வது எப்படி?

Report Print Kavitha in உணவு

வெந்தயக்கீரை பல்வேறு மருத்துவகுணங்கள் நிறைந்தது என்பது நாம் அனைவரும் அறிந்த தகவலே.

அதிலும் வெந்தயக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் இருக்கின்றன. வெந்தயக் கீரையை பல முறைகளில் சமைத்து உண்ணலாம்.

அந்தவகையில் வெந்தயக் கீரை ரசம் பசியை தூண்டும், தொண்டை புண்ணை ஆற்றும் மருத்துவ குணம் கொண்டது.

தற்போது இந்த மருத்துவம் நிறைந்த ரசத்தினை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

 • வெந்தயக்கீரை - ஒரு சிறு கட்டு
 • தக்காளி - ஒன்று
 • புளி - நெல்லிக்காய் அளவு
 • மிளகு, சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
 • பூண்டு - 4 பல்
 • காய்ந்த மிளகாய் - 3
 • மஞ்சள்தூள் - தேவையான அளவு
 • பெருங்காயம் - தேவையான அளவு
 • கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
 • கறிவேப்பிலை - தேவையான அளவு
 • உப்பு - தேவையான அளவு

செய்முறை

முதலில் வெந்தயக்கீரையை சுத்தம் செய்து கொள்ளவும்.

பிறகு பூண்டை நறுக்கி கொள்ளவும்.

கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி வெட்டிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தக்காளி, உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, காய்ந்த மிளகாய், நசுக்கிய பூண்டு, புளிக்கரைசல் சேர்த்துக் கரைத்து கொதிக்க விடவும்.

வேறொரு பாத்திரத்தில் சுத்தம் செய்த வெந்தயக்கீரை போட்டு கீரை மூழ்கும் வரை நீர் விட்டு நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொதிக்கும் ரசத்துடன் சேர்த்துக் கலக்கவும்.

கடைசியாக மிளகு, சீரகத்தூள் சேர்த்து மீண்டும் கலக்கவும்.

ரசம் கொதிக்க ஆரம்பிக்கும் போது இறக்கி விடவும். ரசத்தை கொதிக்க விடக் கூடாது. நுரைத்து வந்தவுடனேயே இறக்கி பரிமாறலாம்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்