சத்தான சுவையான பச்சைப்பயறு கஞ்சி செய்வது எப்படி?

Report Print Kavitha in உணவு

பச்சைப்பயறில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்தவகையில் பச்சைப்பயறில் சத்தான சுவையான கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
  • முழு பச்சைப் பயறு - ஒரு கப்
  • பச்சை மிளகாய் - 2
  • பூண்டுப் பல் - 5
  • பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
  • வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
  • இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன்
  • உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை

முதலில் வெந்தயத்தை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

பின்னர் மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சைப்பயறை அலசி, 6 மணிநேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.

ஊறிய பச்சைப்பயறுடன் நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய பூண்டுப் பல், ஊறவைத்த வெந்தயம், இஞ்சி விழுது கலந்து, உப்பு சேர்த்து குக்கரில் வேகவிடவும்.

விசில் போனவுடன் இறக்கி வைத்து, சூடாக பெருங்காயத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்