வெயில் காலத்தில் உடலை குளிர்ச்சியுடன் வைத்திருக்கும் அரிசி மாவு மோர் களி செய்வது எப்படி?

Report Print Kavitha in உணவு

கோடைக்காலம் ஆரம்பித்து விட்டாலே வெயில் தாங்க முடியாத அளவுக்கு காணப்படும்.

அந்தவகையில் வெயில் காலத்தில் சில உணவுகள் சாப்பிடுவதனால் உடல் குளிர்ச்சி பெறும்.

அதில் கூழ், களி சாப்பிடுவது உடலை குளிர்ச்சியுடன் வைத்திருக்கும் என்று சொல்லப்படுகின்றது.

இன்று அரிசி மாவுடன் மோர் சேர்த்து களி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
  • அரிசி மாவு - 1 கப்
  • மோர் - ½ கப்
  • மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்
  • நல்லெண்ணெய் - சிறிதளவு
  • இந்துப்பு - சிறிதளவு
  • கடுகு, உளுந்து - சிறிதளவு
  • கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் - சிறிதளவு
செய்முறை

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை போட்டு அதனுடன் மோர் சேர்த்து நன்கு கரைத்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கலக்கவும்.

வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டுத் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் கரைத்து வைத்துள்ள அரிசி மாவை ஊற்றி கிளறவும்.

அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறவும். கட்டி சேராமல் பார்த்துக் கொள்ளவும்.

சரியானப் பதத்துக்கு வந்த பிறகு இறக்கி பரிமாறவும்.

சூப்பரான சத்தான அரிசி மாவு மோர் களி ரெடி.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்