மதிய உணவு சாப்பிட்ட பின் தூக்கம் வருவதன் காரணம் என்ன?

Report Print Kavitha in உணவு

அனைவருக்கு மதிய உணவு உண்ட பின் தூக்கம் வருவது வழமையானது ஒன்றாகும்.

இதற்கு நமது உடலின் Circadian rhythm-களில் ஏற்படும் மாறுதல்களே இதற்கு காரணமாக அமைகின்றது.

மேலும் உணவு உண்ட பிறகு இன்சுலின் அளவு உடலில் உயர்வதால் அது மெலடோனின் என்கிற ஹார்மோன் சுரப்பதை அதிகப்படுத்துகிறது. இதனால் ஒருவித மயக்க நிலை ஏற்படும் இதன் போது தூக்கம் வருகின்றது என சொல்லப்படுகின்றது.

அந்தவகையில் இதற்கு பல காரணங்களும் உண்டு. அந்த காரணங்கள் என்ன என்பதனையும் அதற்காக தீர்வு என்ன என்பதனையும் இங்கு பார்ப்போம்.

தூக்கம் வர காரணம்?

நம் மதிய உணவுக்குப்பின் உடலின் சர்க்கரை அளவு திடீரென்று உயர்ந்து பின் குறைகிறது. இதற்கு மாவுச்சத்து அதிகம் நிறைந்த உணவுகள் மற்றும் துரித உணவுகளை உட்கொள்ளும் பழக்கங்கள் காரணமாக அமைகிறது.

ஹார்மோன் அளவு குறைதல் மகிழ்ச்சியின் ஹார்மோன் என்று அழைக்கப்படுகிற இந்த எண்டார்ஃபின் அளவு குறைந்தால் இயற்கையாகவே உடலில் சோர்வு ஏற்படும்.

தூக்கத்தைத் தூண்டும் மெலடோனின் ஹார்மோன் அளவு உயர்வதும், இரவில் சரி வர தூக்கம் இல்லாமல் இருப்பதும் மதிய உணவு உண்டபின் வரும் தூக்கத்திற்கு காரணமாகிறது.

குளிர்சாதன வசதியுடைய அலுவலக வேலையானது தண்ணீர் தாகத்தைக் குறைத்துவிட்டது. இதனால் உடல் வறட்சியாகி சோர்வு உண்டாகும்.

இதனை தவிர்க்க என்ன செய்யலாம்?
  • காலை மற்றும் மதிய உணவுக்கு இடைப்பட்ட நேரங்களில் பயிறு வகைகள், பழங்கள், முந்திரி, பாதாம் போன்றவற்றை உட்கொள்வதன் மூலமாக சர்க்கரையின் அளவை சமநிலைப்படுத்தலாம்.
  • தொடர்ச்சியாக ஒரே இடத்தில் அமர்வதைத் தவிர்க்க வேண்டும். சிறுசிறு இடைவேளைகளில் சோர்வு நீங்க நடைப்பயிற்சியோ, உடற்பயிற்சியோ மேற்கொள்ளலாம்.
  • வெளியில் சென்று வெயில் உடலில் படும்படி நடப்பதால் வைட்டமின் டி-யை அதிகரிக்கச் செய்து, மெலடோனின் அளவைக் குறைக்கிறது.
  • அடிக்கடி தண்ணீர் குடிப்பதன் மூலம் சோர்வு நீங்கி, சுறுசுறுப்பாக வேலை செய்யலாம்.
  • உணவுக்குப் பின் எடுத்துக் கொள்ளப்படும் இனிப்புப் பண்டங்கள் மற்றும் குளிர்பானங்கள் வளர்சிதை மாற்றங்கள் என்று சொல்கிற Diabetes, BP, Obesity போன்ற நிலைகளை மேலும் பாதிக்கும் என்பதால் இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
  • வைட்டமின் சி நிறைந்த கொய்யா, ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய் போன்ற பழவகைகளை உட்கொள்வதால் கொழுப்பை ஆற்றலாக மாற்றி சோர்வை நீக்கலாம்.
  • உணவில் சரிபாதி நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கால் பகுதி புரதம் மற்றும் கால் பகுதி முழு தானியமாக எடுத்துக் கொள்வதை பழக்கமாக்க வேண்டும்.
  • தேவையான தூக்கம், அளவான உடற்பயிற்சி, சரிவிகித உணவுப்பழக்கம், உணவை மென்று உண்ணுதல் போன்றவை நமது மதிய தூக்கத்தைப் போக்கி, சுறுசுறுப்பாக வேலை செய்ய வழிவகுக்கும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers