சுவையான செட்டிநாடு மீன் மசாலா செய்வது எப்படி?

Report Print Kavitha in உணவு

செட்டிநாட்டு சமையல் வாசனைச் சரக்குகளும் நறுமணப் பண்புகளும் நிறைந்த ஒரு இந்திய சமையல் வகை ஆகும்.

இந்த சமையல் பிடிக்காதவர் எவருமே இல்லை என்று தான் சொல்ல முடியும்.

செட்டிநாட்டு சமையலில் சமைக்கும் போது பயன்படுத்தப்படும் பல்வகை வாசனைச் சரக்குகள் பிரபலமானவை.

இது வழமையான உணவுக்கு சுவை கூட்டுவது, அவ்வப்போது அரைத்துச் சேர்க்கும் காரமும் நெடியும் நிறைந்த மசாலாக்கள் நிறைந்து மிகவும் சுவையுடனும் மணமுடனும் காணப்படும்.

தற்போது அந்தவகையை சேர்ந்த சுவையான மீன் மசாலாவை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
 • மீன் - அரை கிலோ,
 • மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
 • புளிக்கரைசல் - 3 டேபிள்ஸ்பூன்,
 • நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்,
 • அரைத்த தேங்காய் விழுது - 1/2 மூடி,
 • பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்,
 • மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்,
 • தனியாத்தூள் - 2 டேபிள்ஸ்பூன்,
 • மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்,
 • வெங்காயம் - 2,
 • தக்காளி - 2,
 • சின்ன வெங்காயம் - 10,
 • பூண்டு பல் - 5,
 • வெந்தயம் - 1/4 டீஸ்பூன்,
 • கடுகு - 1/4 டீஸ்பூன்,
 • கறிவேப்பிலை,
 • கொத்தமல்லித்தழை - சிறிது.
செய்முறை

வெங்காயம், தக்காளி, சின்ன வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மீன் துண்டுகளை நன்கு கழுவி மஞ்சள் தூள், உப்பு, சிறிது புளிக்கரைசல் சேர்த்து ஊற வைக்கவும்.

கடாயில் எண்ணெயை ஊற்றி வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.

தக்காளி, வெங்காயம் ஆறியதும் மிக்சியில் போட்டு, தேங்காய் விழுது சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

மற்றொரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பூண்டு, வெந்தயம், சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கிய பின்னர் அரைத்த தக்காளி விழுதையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

மசாலா பச்சை வாசனை போனவுடன் மசாலா பொடிகளை சேர்த்து வதக்கி, புளிக் கரைசல், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

ஒரு கொதி வந்ததும் மீனை போட்டு 10 நிமிடம் சிம்மில் கொதிக்க விட்டு கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers