மலச்சிக்கல் வராமல் தடுக்கும் பப்பாளி இஞ்சி சூப் செய்வது எப்படி?

Report Print Kavitha in உணவு

மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு பப்பாளி அருமருந்தாக உள்ளது.

பப்பாளியில் உள்ள நார்சத்து மனித உடலில் செரிமானத்தை சீராக்கி, மலச்சிக்கல் வராமல் இருக்க உதவுகின்றது.

அந்தவகையில் பப்பாளியினை வைத்து மலச்சிக்கலை சரி செய்யும் சூப் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • பப்பாளி பழம் - சிறியது (பாதி)
  • இஞ்சி - ஒரு சிறிய துண்டு
  • வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்)
  • காய்கறி வேக வைத்த தண்ணீர் - 3 கப்
  • மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப
  • கொத்தமல்லி தழை - சிறிதளவு
  • கிரீம் - சிறிதளவு
  • உப்பு - தேவையான அளவு.
செய்முறை

பப்பாளி பழம், இஞ்சி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், இஞ்சியை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் மிளகுத்தூள், பப்பாளி சேர்த்து வதக்கி, ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து காய்கறி வேக வைத்த தண்ணீர் சேர்த்து அதனுடன் இந்தக் கலவையை சேர்த்து கொதிக்க வைத்து, உப்பு சேர்த்து, மேலும் சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி... சூப் கப்பில் ஊற்றவும்.

அதில் மிளகுத்தூள், கொத்தமல்லி தழை, கிரீம் சேர்த்துப் பரிமாறவும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers