வாய்ப்புண்ணை குணமாக்கும் துவையல் செய்வது எப்படி?

Report Print Kavitha in உணவு

வாய்ப்புண் வருவது மிகவும் சாதாரண விஷயம்தான். ஆனால், அதைக் கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ பிரச்சினை பெரிதாகிவிடும்.

இதற்கு மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் மட்டுமின்றி, வயிற்றுப்புண்ணும் குணமாகும்.

தற்போது இந்த கீரையை வைத்து வாய்ப்புண்ணை சரி செய்யும் துவையல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
 • மணத்தக்காளி கீரை - அரை கட்டு
 • பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
 • காய்ந்த மிளகாய் - 2
 • பச்சை மிளகாய் - 2
 • உளுத்தம் பருப்பு - 1 மேஜை கரண்டி
 • பூண்டு - 10 பல்
 • சின்ன வெங்காயம் - 15
 • மிளகு - 1 டீஸ்பூன்
 • தேங்காய் துருவல் - கால் கப்
 • புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
 • உப்பு - தேவையான அளவு
 • எண்ணெய் - 1 ஸ்பூன்
செய்முறை

மணத்தக்காளி கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி நறுக்கி வைக்கவும்.

அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும அதில் பெருங்காய தூள், காய்ந்த மிளகாய், உளுந்தம் பருப்பை போட்டு நன்றாக சிவக்கும் வரை வறுக்கவும்.

பிறகு அதில் மிளகு, பூண்டு, பச்சை மிளகாய் இவற்றை போட்டு நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கி பின்பு அதில் சிறிய வெங்காயத்தை போட்டு அதன் நிறம் மாறும் வரை வதக்கவும்.

அதனுடன் கழுவி சுத்தம் செய்யப்பட்ட மணத்தக்காளி கீரை, தேங்காய் துருவலை போட்டு 5 நிமிடங்கள் நன்கு வதக்கி இந்த கலவையை அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக ஆற விடவும்.

ஆறியதும் இந்த கலவையை ஒரு மிக்ஸியில் இட்டு அதனுடன் புளி, தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது நீர் விட்டு கெட்டியாக அரைத்து கொள்ளவும்.

இதை சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி என அனைத்து தென் இந்திய உணவுகளோடு சேர்த்து சாப்பிடலாம். உடலுக்கும் நல்லது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்