ஆரோக்கியமான சுவையான கோதுமை ரவா தோசை செய்வது எப்பது?

Report Print Abisha in உணவு

ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் சுவை இல்லையேல் எவரும் விரும்புவதில்லை. எனவே ஆரோக்கியமான உணவை சுவையுடன் வழங்கலாம். அந்த வகையில், கோதுமை ரவா தோசை செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • அரிசி மாவு - கால் கப்,
  • கோதுமை ரவை - முக்கால் கப்,
  • புளித்த மோர் - ஒரு கரண்டி,
  • சீரகம் - ஒரு டீஸ்பூன்,
  • வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று,
  • இஞ்சி - சிறு துண்டு,
  • கொத்தமல்லி - ஒரு டேபிள்ஸ்பூன்,
  • கறிவேப்பிலை - தேவையான அளவு,
  • எண்ணெய் - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு.

வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை சிறிதாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கோதுமை ரவை, உப்பு, சீரகம், மோர், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, தண்ணீர் விட்டு, தோசை மாவை போன்ற பதத்தில் கொண்டு வரவும்.

பின் இதை சாதரண தோசை போல் சுட்டு எடுத்து கொள்ளலாம். வேகும் போது எண்ணை சிறிதளவில் மேலே ஊற்றினால் இன்னும் சுவை அதிகமாக இருக்கும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...