இலங்கை வாழ் மக்களுக்கு மிகவும் பிடித்த சுவையான தேங்காய் சம்பல் செய்வது எப்படி?

Report Print Kavitha in உணவு

இலங்கை உணவு முறையில் மிகவும் பிரபல்யம் ஆனது தேங்காய் சம்பல் ஆகும்.

இதனை இலங்கை சிங்களவர் பொல் சம்பல் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது.

இதனை சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ளவும், சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் பயன்படுகின்றது.

தற்போது இந்த சுவையான தேங்காய் சம்பலை எப்படி தயாரிப்பது என்பது பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • துருவிய தேங்காய் - ஒரு கப்
  • சின்ன வெங்காயம் - கைப்பிடி அளவு.
  • வரமிளகாய் - நான்கு
  • உப்பு - தேவையான அளவு.
  • எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி.
  • கடுகு உளுத்தம் பருப்பு - கால் டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து.
செய்முறை

சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மிக்ஸியில் வரமிளகாய் உப்பு போட்டு ஒரு சுற்று சுற்றி மசிந்ததும் அதோடு துருவிய தேங்காயை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம் சேர்த்து நன்றாக வதங்கியதும்

வெங்காயம் நன்றாக வதங்கியதும் மிக்ஸியில் உள்ள ஒன்றிரண்டாக அரைத்த தேங்காயை சேர்த்து ஒரு வதக்கு வதக்கி இறக்கவும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...