ஆரோக்கியம் நிறைந்த வெண்டைக்காய் சாதம் செய்வது எப்படி?

Report Print Kavitha in உணவு
161Shares

பொதுவாக சைவ உணவுகளில் வெண்டைக்காயை அதன் வழவழப்பு தன்மை காரணமாக பலரும் ஒதுக்கி வைப்பதுண்டு.

உண்மையில் அந்த வழவழப்புத் தன்மையில்தான் வெண்டைக்காயின் அத்தனை மருத்துவப் பலன்களும் மறைந்துள்ளன.

இந்த வழவழப்பில் உள்ள நார்ச்சத்து அல்சர் பாதித்தவர்களுக்கு அருமருந்து. தவிர, மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வயிற்று உபாதைகள் அனைத்தையும் குணப்படுத்தக் கூடியதும்

அதுமட்டுமின்றி வெண்டைக்காயில் உள்ள வைட்டமின் சி, ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்கக் கூடியது.

இதில் உள்ள ஃபோலேட், எலும்புகளை உறுதியாக்கி, ஆஸ்டியோபொரோசிஸ் பாதிப்பைக் குறைக்கிறது.

மேலும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப் பாட்டில் வைக்கவும் வெண்டைக்காய் உதவுகிறது.

அடிக்கடி வெண்டைக்காய் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அடிக்கடி சளி, இருமல் வருவதும் தவிர்க்கப்படுகிறது.

அந்தவகையில் இவ்வளவு சத்து நிறைந்த வெண்டைக்காயில் சாதம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
 • வெண்டைக்காய் - 100 கிராம்
 • உதிரியாக வடித்த சாதம் - 1 கப்
 • கெட்டியான புளிக்கரைசல் - 1 டேபிள் ஸ்பூன்
 • மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
 • மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
 • காய்ந்த மிளகாய் - 4
 • கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
 • பட்டை - 2
 • கடுகு - 1 டீஸ்பூன்
 • கறிவேப்பிலை - சிறிது
 • எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
 • உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை

வெண்டைக்காயை இரண்டாகப் பிளந்து வந்துவிடாமல் லாவகமாக வகிர்ந்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் சேர்த்து, சூடானதும் வெண்டைக்காயை போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.

லேசாக வெந்ததும், அதில் மஞ்சள் தூள், உப்பு, புளிக்கரைசல், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

குறைந்த தணலில் வைத்து, மசாலா வெண்டைக்காய் முழுவதும் படிகிற படி வதக்கித் தனியே எடுத்து வைக்கவும்.

இன்னொரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, பட்டை, மஞ்சள் தூள் சேர்த்துப் பொன்னிறத்துக்கு வறுக்கவும்.

இதில் சாதம், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி, வெண்டைக்காய் மசாலாவையும் சேர்த்துக் கிளறவும்.

குறைந்த தணலில், சாதம், மசாலா எல்லாம் சேர்ந்து வரும்படி 5 நிமிடங்களுக்குக் கலந்து பரிமாறவும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்