உருளைகிழங்கு லாலிப்பப் செய்வது எப்படி?

Report Print Abisha in உணவு

உருளைகிழங்கு பிடிக்காதவர் இருக்க முடியாது. அப்படி என்றால், அதை விரும்ப தகுந்தவாறு பல விதங்களில் செய்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவர் அத்தகையவையில் ஒன்றுதான் அலு லாலிப்பப்

தேவையான பொருட்கள்

 • உருளை கிழங்கு - 3
 • உப்பு - தேவைக்கு
 • எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
 • சாட் மசாலா - 1/2 தேக்கரண்டி
 • மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
 • பூண்டு பொடி - 1 தேக்கரண்டிரெட்
 • கலர் - பின்ச்
 • பட்டை தூள் - 1/4 தேக்கரண்டி
 • சீரக தூள் - 1 தேக்கரண்டி
 • சோள மாவு- 1 தேக்கரண்டி (தண்ணீரில் கரைத்து கொள்ளுங்கள்)
 • பிரட் தூள்
 • பிரட் ஸ்டிக் ( ஒன்றை பாதியாக உடைத்து உபயோகிக்கலாம்)

உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்து ஆறியதும் தோல் உரித்து பிசையவும். பிசைந்த உருளைக்கிழங்குடன் கலர், உப்பு, மிளகாய் தூள், சாட் மசாலா, பூண்டு பொடி, பட்டை தூள், சீரக தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.அந்த கலவை கிழங்கை சிக்கனை போல் பிரட் ஸ்டிக்கில் வடிவமைத்து கொள்ளுங்கள்.வடிவமைத்த உருளைக்கிழங்கை சோள கலவையில் முக்கி பிரட் தூளில் பிரட்டி எடுக்கவும்.கடாயில் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரட்டிய கிழங்கை மிதமான நெருப்பில் பொரித்து எடுக்கவும்.

பின் பரிமாறலாம். இதற்கு தக்காளி சாஷ், சிறப்பாக இருக்கும்

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்