நார்ச்சத்து நிறைந்த அவகோடா பச்சைப்பயிறு தோசை செய்வது எப்படி?

Report Print Kavitha in உணவு

அவகோடா பழம். இதில் நல்ல கொழுப்புக்கள், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அடங்கியுள்ளன.

அதுமட்டுமின்றி அவகோடாவில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது.

அந்தவகையில் அவகோடா, பச்சைப்பயிறு சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • சிவப்பு அரிசி - 1 கப்
  • அவகோடா - 2
  • முளைகட்டிய பச்சைப்பயிறு - அரை கப்
  • உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

சிவப்பு அரிசியை நன்றாக கழுவி அரை மணிநேரம் ஊறவைக்கவும்.

அரிசி நன்றாக ஊறியதும் அதனுடன் முளைகட்டிய பச்சைப்பயிறு, அவகோடா சேர்த்து (அவகோடா கொட்டையை நீக்கி விடவும்) தோசை மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.

அரைத்த மாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அரை மணிநேரம் ஊறவைக்கவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.

சூப்பரான சத்தான அவகோடா பச்சைப்பயிறு தோசை தயார்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்