காளான் 65 செய்வது எப்படி?

Report Print Abisha in உணவு

ஆரோக்கியமான உணவுகளின் ஒன்று காளான். மாமிச உணவுகள் எடுத்து கொள்ளாதவர்கள் பெரும்பாலும் காளானை உணவில் சேர்த்து கொள்வர். அப்படிபட்ட காளானில் 65 செய்யும் முறை பற்றி தெரிந்து கொள்வோம் .

தேவையான பொருட்கள்

 • காளான் - 200 கிராம்
 • அரிசி மாவு - 100 கிராம்
 • சோள மாவு - 25 கிராம்
 • தனியா பொடி - 2 தேக்கரண்டி
 • கரம் மசாலா பொடி - 2 தேக்கரண்டி
 • மிளகாய் பொடி - 2 தேக்கரண்டி
 • இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
 • மஞ்சள் பொடி - தேவையான அளவு
 • சீரகம் தூள் - கால் தேக்கரண்டி
 • மிளகு தூள் - அரை தேக்கரண்டி
 • தயிர் - 100 கிராம்
 • உப்பு - தேவையான அளவு
 • எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை

 1. காளானை நன்று கழுவி சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்
 2. பாத்திரத்தில் அரிசி மாவு, சோள மாவு, தனியா பொடி, கரம்மசாலா பொடி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், தேவைக்கு உப்பு சேர்ந்து கலந்து கொள்ளவும்
 3. அவற்றுடன் இஞ்சி பூண்டு விழுது, மற்றும் தயிர் சேர்ந்து நன்றாக கலக்கவும்
 4. அதனனுடன் துண்டுகளாக்கப்பட்ட காளான்களை பிசைந்து அரைமணிநேரம் ஊற வைக்கவும்.
 5. வாணலியை அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றி வறுத்து எடுக்கவும்.

காளான் 65 தயார்...

குறிப்பு

 • எக்காரணம் கொண்டும் இதில் தண்ணீர் சேர்க்கக்கூடாது
 • அரை மணி நேரத்திற்கு மேல் ஊறவைக்க கூடாது

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers