ருசியான இலங்கை ரொட்டி எப்படி செய்வது?

Report Print Kavitha in உணவு

இலங்கை உணவுகளில் பல மாகண,மாவட்டங்களில் பலரும் சுவைத்து சாப்பிட கூடிய உணவாக தேங்காய் ரொட்டி திகழ்கின்றது.

இதனை சிங்களத்தில் “ போல் ரொட்டி” என்று அழைப்பார்கள்.

அந்தவகையில் தற்போது இந்த சுவையான தேங்காய் ரொட்டியை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • மைதா மாவு – அரை கப்
  • கோதுமை மாவு – அரை கப்
  • பச்சை மிளகாய் – ஒன்று
  • தேங்காய்த் துருவல் – அரை கப்
  • தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு.
செய்முறை

பச்சை மிளகாயை பொடிப் பொடியாக நறுக்கவும். தேங்காய்த் துருவல், மைதா மாவு, பச்சை மிளகாய்.

உப்பு ஆகிய வற்றுடன் தண்ணீர் சேர்த்துக் கலந்து, ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கெட்டியாகப் பிசையவும்.

மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, கனமாக தட்டி, சூடான தோசைக்கல்லில் போடவும். இரு பக்கமும் எண்ணெய் ஊற்றி சுட்டெடுத்து, மாசி சம்பலுடன் சாப்பிடலாம்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்