டயட்டில் உள்ளவர்களுக்கு ஆரோக்கியமான ஓட்ஸ் தயிர் பாத் செய்வது எப்படி?

Report Print Kavitha in உணவு

இன்று டயட் என்ற பெயரில் நம்மில் பலர் கண்ட கண்ட உணவு முறைகளை பின்பற்றுவதுண்டு.

ஆனால் இது சில சமயங்களில் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது.

டயட் செய்ய நினைப்போருக்கு சிறந்த உணவாக ஒட்ஸ் இருக்கின்றது.

வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு ஓட்ஸ் எடுப்பது நல்ல பயனை தருகின்றது.

அந்தவகையில் ஒட்ஸ் கொண்டு தயாரிக்கப்படும் ஓட்ஸ் தயிர் பாத் டயட்டில் உள்ளவர்கள் மிகவும் சிறந்தாக இருக்கின்றது.

தற்போது ஓட்ஸ் தயிர் பாத்தை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • ஓட்ஸ் - 1 கப்
  • தயிர் - 1 கப்
  • கேரட் - 1 பெரியது
  • கடுகு - கால் டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 3
  • இஞ்சி - 1 சிறுதுண்டு
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
  • பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
  • உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை

ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும். கேரட்டை துருவி வைத்துக் கொள்ளவும்.

இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளித்து, நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.

பிறகு துருவிய கேரட்டை போட்டு வதக்கவும்.

அடுத்து அதில் தயிர், சிறிது உப்பை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, பிறகு அதில் ஓட்ஸ் சேர்த்து கலக்க வேண்டும்.

தற்போது ஆரோக்கியமான ஓட்ஸ் தயிர் பாத் தயார்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers