எலும்புப்புரை நோயிலிருந்து விடுபட தவிர்க்க வேண்டிய உணவுகள்

Report Print Givitharan Givitharan in உணவு

எலும்புப்புரை (Osteoporosis) நோயானது எலும்புகளை வலுவிழக்கச் செய்வதுடன் உடைவுகளையும் ஏற்படுத்துகின்றது.

எனவே இந்நோயிலிருந்து பாதுகாப்பினை பெறுவதற்கு உண்ண வேண்டிய உணவுகள் காணப்படுகின்ற அதேவேளை தவிர்க்க வேண்டிய உணவுகளும் இருக்கின்றன.

அன்றாட உணவுப் பழக்கத்திலிருந்து குறித்த உணவுகளை நீக்கினாலே எலும்புகளை ஆரோக்கியமாக பேண முடியும்.

-முதலில் காபனேற்றப்பட்ட உணவுகளை அவசியம் தவிர்க்க வேண்டும்.

இவ் வகை உணவுகள் எலும்புகளுக்கு மாத்திரமன்றி முழு உடலுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியவை. இவை பொதுவாக குளிர்பானங்களாகவே காணப்படுகின்றன.

எனவே இவற்றிற்கு பதிலாக இளநீர், பால், ஜுஸ் மற்றும் எலுமிச்சை சாறு என்பவற்றினை பருக முடியும்.

-அடுத்ததாக உணவில் அதிக அளவில் உப்பு சேர்ப்பதையோல் அல்லது அதிக உப்பு சேர்க்கப்பட்ட உணவுகளையோ தவிர்க்க வேண்டும்.

இவ் வகை உணவுகள் எலும்புகளில் காணப்படும் கல்சியத்தின் அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியன. அதாவது கல்சியத்தின் அளவை குறைப்பதற்கு காரணமாக அமைவதால் எலும்புகளின் வலிமையை பாதிக்கும்.

எனவே குறைந்தளவு உப்பினை பயன்படுத்துவது சிறந்ததாகும்.

-கஃபைனின் அளவை மட்டுப்படுத்தல்

கஃபைன் (Caffeine)எனப்படும் இரசாயனப்பதார்த்தமானது தேநீரில் காணப்படுகின்றது.

எனவே அதிகமாக தேநீர் அருந்துவதானது எலும்பிலுள்ள கல்சியம் அளவினை குறைப்பதுடன், எலும்பை வலுவிழக்கவும் செய்கின்றது.

இதனால் தேநீர் அருந்துவதை மட்டுப்படுத்துவதுடன், கஃபைனிற்கு பதிலாக மாற்று வேதிப்பொருள் அடங்கிய உணவுப் பொருட்களை உள்ளெடுக்க முடியும்.

- அல்கஹோல் பாவனையை தவிர்த்தல்

அல்கஹோல்கள் சாதாரணமாகவே உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கக்கூடியவையாகும்.

அதேபோன்று எலும்பு மச்சை தோற்றுவிக்கப்படுவதை தடுப்பதுடன், குறைந்த எலும்பு திணவு மற்றும் எலும்பு உடைவு ஏற்படுவதற்கு காரணமாகவும் அமைகின்றது.

குறிப்பு : விட்டமின் D ஆனது கல்சியத்தின் அளவை சீராக பேண உதவுகின்றது. எனவே விட்டமின் D கலந்த உணவினை அதிகமாக உள்ளெடுப்பதன் ஊடாக இவ் எலும்பு பிரச்னைகளை தவிர்க்க முடியும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்