மலச்சிக்கலை போக்கும் பப்பாளி இஞ்சி ஜூஸ் செய்வது எப்படி?

Report Print Kavitha in உணவு
131Shares

குடலில் ஏற்படும் கோளாறுகள் உடல் இயக்கத்தை பெருமளவில் பாதிக்கிறது. அதில் முக்கியமானது மலச்சிக்கல் ஆகும்.

ஒரு வாரத்தில் 3 அல்லது அதற்கும் குறைவான தடவை மலம் வெளியேறினால், அல்லது மலம் மிகவும் வலியுடனுடம் மிகவும் உலர்ந்தும் வெளியேறினால் அதைத்தான் மலச்சிக்கல் என கூறப்படுகின்றது.

இதற்கு கண்ட கண்ட மருந்துகளை வாங்கி உபயோகிக்கமால் வீட்டில் இருக்கம் பொருட்களை கொண்டு சரி செய்ய முடியும்.

அந்தவகையில் மலச்சிக்கலை போக்கும் பப்பாளி இஞ்சி ஜூஸ் எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருள்கள்
  • பப்பாளி பழம் - 1
  • எலுமிச்சை பழம் - 1
  • இஞ்சி - சிறிய துண்டு
  • ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு
  • தேன் - தேவையான அளவு
செய்முறை

பப்பாளி பழத்தின் தோலை நீக்கி விட்டு, கொட்டையை எடுத்து விட்டு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து கொள்ளவும்.

இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.

மிக்சியில் நறுக்கி பப்பாளி பழம், இஞ்சி, எலுமிச்சை சாறு, தேன், ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். தற்போது சுவையான பப்பாளி இஞ்சி ஜூஸ் ரெடி.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்