வயிறு தொடர்பான நோய் வராமல் தடுக்கும் புதினா சூப் செய்வது எப்படி?

Report Print Kavitha in உணவு

புதினா கீரையை பல விதமான வயிற்றுக் கோளாறுகள், வயிற்று உப்புசம் முதலியவற்றுக்கு மருந்தாகப் பயன்பட்டு வருகின்றது.

புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன.

அந்தவகையில் வயிறு தொடர்பான பிரச்னையை எளிதில் போக்க கூடிய சத்து நிறைந்த புதினா சூப் எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருள்கள்
  • புதினா - 1 கட்டு
  • பூண்டு- பாதி (சிறியது)
  • மிளகு - 2 ஸ்பூன்
  • சீரகம் - 1 ஸ்பூன்
  • சின்ன வெங்காயம் - 10
  • எலுமிச்சை பழம் - பாதி
  • உப்பு - தேவையான அளவு
செய்முறை

புதினாவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பூண்டு, மிளகு மற்றும் சீரகத்தை சிறிது தட்டி வைத்து கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியில் தினாவை போட்டு நீர் விட்டு நன்கு கொதிக்க வைத்து கொதித்ததும் தட்டி வைத்த பூண்டு, மிளகு, சீரகத்தை போட்டு மீண்டும் கொதிக்க விடவும்.

சூப் பதம் வந்ததும் கடைசியாக எலுமிச்சை பழத்தை பிழிந்து ஊற்றி இறக்கி பரிமாறவும்.

சுவையான, ஆரோக்கியமான புதினாக்கீரை சூப் தயார். இதை தொடர்ந்து குடித்து வந்தால் வயிறு சம்பந்தப்பட்ட எந்த நோய்களும் வராமல் தடுக்கலாம்.

Google

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்