இருமலை குணமாக்கும் வெற்றிலை துளசி சூப் செய்வது எப்படி?

Report Print Kavitha in உணவு

இருமல் என்பது நுரையீரல், பெரிய காற்றுக்குழாய்கள் மற்றும் தொண்டை ஆகியவற்றிலிருந்து சளியை அல்லது உறுத்தும் துணிக்கைகளை அகற்றுவதற்காக உடலினால் ஏற்படுத்தப்படும் சத்தமும் அசைவுமாகும்.

சாதாரண தடிமல் போன்ற ஒரு வைரஸால் ஏற்படும் சுவாசத்திற்குரிய தொற்று நோயே இருமலுக்கான மிகப் பொதுவான காரணமாகும்.

இதற்கு என்னத்தான் மருந்துகள் இருந்தாலும் இயற்கை வழியே சிறந்தது என்று கருதப்படுகின்றது.

அந்தவகையில் சளி, இருமல், தொண்டை வலியால் அவதிப்படுவர்கள் வெற்றிலை துளசி சூப் செய்து குடிக்கலாம்.

தற்போது இந்த அற்புத சூப்பை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
 • தண்ணீர் - 1 கப்
 • சீரகப் தூள் - 1/2 டீஸ்பூன்
 • மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
 • மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
 • துளசி இலை - ஒரு கைப்பிடி அளவு
 • வெற்றிலை - 5 அல்லது 6 இலைகள்
 • புளி கரைசல் - ஒரு டீஸ்பூன்
 • இஞ்சி - ஒரு துண்டு
 • தக்காளி - ஒன்று
 • சிவப்பு மிளகாய் - ஒன்று
 • உப்பு - தேவையான அளவு
செய்முறை

இஞ்சியை ஒன்றும் பாதியாக நசுக்கிகொள்ளவும்.தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பாத்திரத்தில் தண்ணீர் ஒரு கப் (100 மிலி) ஊற்றி, சூடானவுடன், மஞ்சள் தூள், ஒரு கைப்பிடி துளசி இலை, வெற்றிலை ஐந்தாறு இலைகள், புளி கரைசல், நசுக்கிய இஞ்சி, தக்காளி, சிவப்பு மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

நன்றாக கொதித்து பக்குவம் வந்தவுடன் இறக்கி வடிகட்டி மிளகு தூள் சேர்த்து சூடாக சூப்பைப் பரிமாறவும்.

Google

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்