உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்த பீட்ரூட் மாதுளம் பழம் சூப் செய்வது எப்படி?

Report Print Kavitha in உணவு

பீட்ரூட் காய் பல அத்தியாவசியமான சத்துக்களை கொண்ட ஒரு காய்வகையாகும்.

பீட்ரூட்டில் இரும்புச்சத்து, ஃபோலேட், வைட்டமின் 12 போன்ற இரத்தணுக்களின் உற்பத்திற்கு வேண்டிய சத்துக்கள் வளமாக உள்ளது.

ஆகவே உடலில் இரத்தணுக்களின் அளவு சீராக இருக்க நினைத்தால், பீட்ரூட் ஜூஸை அடிக்கடி குடிப்பது நல்லது.

பீட்ரூடன் மாதுளையை சேர்க்கும் போதும் உடலுக்கு பலவகையில் சத்துக்களை அள்ளித்தருகின்றது.

அந்தவகையில் இது இரண்டையும் வைத்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • மாதுளை முத்துக்கள் - ஒரு கப்,
  • மாதுளைத் தோல் - கால் கப்,
  • துருவிய பீட்ரூட் - கால் கப்,
  • தக்காளி - 2,
  • கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 2 டீஸ்பூன்,
  • வெண்ணெய் - அரை டீஸ்பூன்,
  • கிராம்பு - 2,
  • மிளகுத்தூள்,
  • உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை

மாதுளைத் தோல், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்,

மாதுளை முத்துக்கள், மாதுளைத் தோல், துருவிய பீட்ரூட், நறுக்கிய தக்காளியை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

அடிகனமான பாத்திரத்தில் வெண்ணெயை சேர்க்கவும்.

கிராம்பு, கார்ன்ஃப்ளார் சேர்த்து லேசாக வறுக்கவும்.

அரைத்த மாதுளை விழுது, 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

எல்லாம் சேர்ந்து கொதித்ததும் அடுப்பை அணைத்து, பரிமாறும் பாத்திரத்துக்கு மாற்றவும்.

உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சூடாகப் பரிமாறவும். பீட்ரூட் மாதுளம் பழம் சூப் ரெடி.

greenmountgastronomy.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers