நீங்கள் தூய தேனைத்தான் பயன்படுத்துகின்றீர்களா? கண்டறிவது எப்படி?

Report Print Givitharan Givitharan in உணவு

உடலுக்கு பல்வேறு ஆரோக்கியங்களை தரக்கூடிய வல்லமை தூய தேனுக்கு காணப்படுகின்றது.

ஆனால் இன்று சந்தையில் போலியான முறையில் உருவாக்கப்பட்ட தேன்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

இவற்றினை வாங்கி பயன்படுத்தும்போது எதிர்பார்த்த நன்மைகளை பெற முடிவதில்லை.

எனவே தூய தேனை பார்த்து வாங்குவதற்கு சில வழிமுறைகள் உள்ளன.

அவற்றைப்பற்றி இங்கே பார்க்கலாம்.

வினாகிரியை பயன்படுத்துதல்

வினாகிரி நீர்க் கரைசலில் வாங்கும் தேனில் சில துளிகளை சேர்த்து கலக்கும்போது நுரைகள் உருவாகினால் அது தூய தேன் அன்று.

தூய தேனை வினாகிரியில் சேர்க்கும்போது எவ்விதமான நுரைகளும் தோன்றாது.

வெப்ப பரிசோதனைக்கு உட்படுத்தல்

தேனில் தீக்குச்சி அல்லது பருத்தியை தோய்த்து பின்னர் தீப்பற்ற வைக்கவும்.

இதன்போது குறித்த தீக்குச்சி அல்லது பருத்தி தீப்பற்றினால் அது தூய தேன் ஆகும்.

நீரைப் பயன்படுத்தி பரீட்சித்தல்

தூய தேன் ஆனது ஒருபோதும் நீருடன் கலக்காது. எனவே சிறிதளவு தேனை நீரில் இட்டு கலக்கிப் பார்க்கவும்.

அவ்வாறு செய்யும்போது தேனும் நீரும் கலந்தால் அது தூய தேன் அன்று.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்