குழந்தைகளுக்கு பிடித்தமான ஸ்நாக்ஸ் சிக்கன் பாப்கார்ன் செய்முறை...

Report Print Abisha in உணவு

ஓட்டலில், கிடைக்கும் சிக்கன் பாப்கார்ன் குழந்தைகள் அதிகம் விரும்பி உண்பார்கள். அதை ஓட்டல்களில் வாங்கி கொடுக்கும் பெற்றோர் எண்ணெய், மாவு போன்றவை குறித்து அதிகம் கவலைபடுவதுண்டும். அதை தவிற்க வீட்லேயே சிக்கன் பாப்கார்ன் தாயரிக்கும் முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • சிக்கன் - கால் கிலோ
  • கார்ன் ஃப்ளார் - 2 மேஜைக்கரண்டி
  • முட்டை - 1
  • பிரெட் தூள் - 1 கப்
  • உப்பு - தேவையான அளவு
  • இஞ்சி பூண்டு விழுது - 3/4 மேஜைக்கரண்டி
  • மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - 3/4 தேக்கரண்டி
  • எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும். ஒரு பௌலில் மிளகாய் தூள் மிளகு தூள் இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

வெட்டி வைத்த சிக்கனை கலந்து வைத்த மசாலா பொருட்களுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.

அத்துடன் கார்ன் மாவு சேர்த்து சிக்கன் மேல் தடவி கொள்ளவும்.

மேலும் அதில் முட்டை சேர்த்து கலந்து கொள்ளவும்.

ஒவ்வொரு சிக்கன் துண்டையும் இந்த பிரெட் துளில் தொட்டு எடுக்கவும்.

அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து பொரித்து எடுக்கவும். மொத்தமாக போடாமல் ஒவ்வொரு துண்டாக எண்ணெயில் போட்டு பொரிக்கவும். பொன்னிறமாக வரும்வரை வைத்திருந்து எடுக்கவும்.

இதை தக்காளி சாஷ்யுடன் பரிமாறலம்...

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்