உலகில் அதிக அளவு மக்களால் உணவாக சாப்பிட பயன்படுத்தப்படும் தானியமாக கோதுமை இருக்கிறது.
ரொட்டி, தேசை, உப்புமா, புட்டு என்ற அனைத்து உணவுகளிலும் கோதுமை பயன்படுகின்றது.
கோதுமை செய்யப்படும் உணவுகளை உண்பதனால் உடலில் உள்ள பல நோய்களை விரட்டும் தன்மை கொண்டது.
அதிலும் சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் இந்த கோதுமை பிரெட்டில் தயாரிக்கப்படும் உப்புமா சாப்பிடலாம. இது உடலுக்கு நல்லது.
அந்தவகையில் தற்போது இந்த உப்புமாவை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- கோதுமை பிரெட் துண்டுகள் - 6
- வெங்காயம் - 1
- பச்சை மிளகாய் - 2
- மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
- லெமன் - 1
- கறிவேப்பிலை - தேவையான அளவு
- கடுகு - அரை டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
- கொத்தமல்லி - சிறிதளவு
- கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
- எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில், கோதுமை பிரெட் துண்டுகளை உதிர்த்து கொள்ளவும்.
கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் ப.மிளகாய், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
அடுத்து மஞ்சள் தூள் சேர்க்கவும். அடுத்து அதில் உதிர்த்து வைத்துள்ள கோதுமை பிரெட், உப்பு சேர்த்து கிளறவும். அதிக நேரம் கிளற வேண்டியதில்லை. 5 நிமிடங்கள் வதக்கினால் போதுமானது.
கடைசியாக எலுமிச்சை சாறு பிழிந்து கிளறி இறக்கி, கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.