சுவையான கருப்பட்டி கொழுக்கட்டை செய்வது எப்படி?

Report Print Kavitha in உணவு

கொழுக்கட்டை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு பலகாரமாகும்.

இது விநாயகர் சதுர்த்தி அன்று அனைவரது வீட்டிலும் செய்யப்படும் ஒரு பலகாரம்.

அந்தவகையில் சுவையான கொழுக்கட்டை எப்படி தயாரிப்பது என்பது பார்ப்போம்.

தேவையானவை
  • அரிசி மாவு - ஒரு கப்
  • கருப்பட்டி - அரை கப்
  • தேங்காய் துருவல் - ஒரு கப்
  • ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்
  • பொட்டுக்கடலை மாவு - 2 டீஸ்பூன்
  • நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
  • தண்ணீர் - ஒன்றே கால் கப்
  • உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை

முதலில் கடாயில் தண்ணீர் விட்டு... உப்பு சேர்த்து, சிறிதளவு எண்ணெய் விட்டு அடுப்பில் வைக்கவும். கொதித்து வரும்போது அரிசி மாவு தூவி, கட்டி இல்லாது கெட்டியாகும் வரை கிளறி எடுத்து ஆறவிடவும்

கடாயில் கருப்பட்டியுடன் தண்ணீர் சேர்த்து சூடாக்கி, கருப்பட்டியை கரையவிட்டு வடிகட்டி, இத்துடன் தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், பொட்டுக்கடலை மாவு சேர்த்து பூரணமாக கிளறி எடுக்கவும்.

கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, மாவு கலவையில் சிறிது எடுத்து உருட்டி, கிண்ணம்போல் செய்து, பூரணம் கொஞ்சம் வைத்து மூடவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்