குழந்தைகளை பச்சை பயறு உண்ண வைக்கணுமா? இப்படி செய்தால் நிச்சயம் முடியும்

Report Print Abisha in உணவு

உடலுக்கு ஆரோக்கியமான உணவில் ஒன்று பச்சை பயறு. இதை எப்படி உண்டலும் சிறந்தது. ஆனால், குழந்தைகள் மட்டும் விரும்பி உண்பதில்லை. அப்படி என்றால், அவர்களை உண்ண வைக்க பயாசமாக செய்து கொடுக்கலாம்.

தேவையான பொருட்கள்

பச்சை பயறு - 1 கப்

வெல்லம் - அரை கப்

தேங்காய் - அரை கப்

ஏலக்காய் பொடி - ஒரு ஸ்பூன்

முந்திரி - கால் கப்

நெய் - 2 ஸ்பூன்

பச்சைப் பயறை இரவு ஊற வைத்துவிடுங்கள். மறுநாள் குக்கரில் வேக வைத்து 4 விசில் வரை காத்திருக்கவும்.

பாத்திரத்தில் வெல்லத்தை ஒரு ஸ்பூன் தண்ணீர் ஊற்றி பாகு போல் உருக வையுங்கள். உருகியதும் வடிகட்டி கொள்ளவும்.

பயறை இறக்கியதும் அதை ஒன்றும் பாதியுமாக கடைந்து கொள்ளுங்கள். கெட்டியாக இருக்கும் பயறு கொதிக்க போதுமான அளவு தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள்.

அதை அடுப்பில் நன்கு கொதிக்க வைக்கவும்.

வடிகட்டிய வெல்லத்தை ஊற்றி நன்குக் கலக்கி கொதிக்க விடுங்கள். கொதி நிலை வந்ததும் துருவிய தேங்காயை போட்டுக் கலக்குங்கள்.

போதுமான கெட்டிப் பதம் வந்ததும் இறக்கிவிட்டு நெய்யில் முந்திரி பருப்பை தாளித்து அதோடு ஏலக்காய் பொடியும் சேர்த்துக் கொட்டிக் கிளறுங்கள்.

சுவையான பச்சை பயறு பாயாசம் தயார்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்