இருமலை போக்கும் அதிமதுரம் டீ! செய்வது எப்படி?

Report Print Kavitha in உணவு

அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

குறிப்பாக இருமலை போக்க கூடிய சக்தி அதிமதுரத்திற்கு உள்ளது.

அந்தவகையில் இருமலை போக்க அதிமதுரத்தை எப்படி உபயோகப்படுத்தலாம் என இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • அதிமதுரம் தூள் - 1 டீஸ்பூன்
  • தண்ணீர் - 1 டம்ளர்
  • நாட்டு சர்க்கரை - தேவைக்கு

செய்முறை

பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட வேண்டும், அதனுள் அதிமதுரம் தூளை தூவி இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும்.

கொதிக்க தொடங்கியதும் நாட்டு சர்க்கரையை கொட்ட வேண்டும், அது கரைந்ததும் இறக்கி வடிகட்டி பருகலாம்.

இது தொண்டை வலி மற்றும் புண்ணை ஆற்ற உதவும், சளியையும் போக்கும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்